பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவம் 五77 அழுங்கி இயற்கையைப் பழிக்கின்றாள். எதார்த்தத்தைச் சொல்லுகிறதானால், இரவு சீக்கிரம் தொலையாதா, பகற்பொழுது வராதா, வந்தாலும், நாலுகாட்சிகளைப் பார்த்தாவது மனச்சாந்தி அடையலாமே என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே உண்மையை இனிய கற்பனை முலாம் பூசிக் காட்டுகிறதானால் அதற்குக் கிடைக்கின்ற வேகமும் வீரியமும் அழுத்தமும் ஒரு தனி ரகந்தான். பாம்புதான் இந்தச் சூரியனை விழுங்கி விட்டதா? அல்லது அவன் தேரிலுள்ள அச்சுமரம் ஒடிந்து குதிரைகளெல்லாம் கயிற்றைப் பறித்துக்கொண்டு ஓடி விட்டனவா? அல்லது சூரியனே செத்து மடிந்து விட் டானா? தோழி, எந்த விதமாகப், பொழுது விடியப் போகின்றது?’ என்று இவ்வாறு சொல்லும் பொழுது உண்மையிலேயே மிக ரம்மியமாக இருக்கின்றது. அரவம் கரந்ததோ அச்சுமரம் இற்றுப் புரவி கயிருருவிப் போச்சோ-இரவிதான் செத்தானோ வேறுவழிச் சென்றானோ தோழி எத்தால் விடியும் இரா. யெனக்கு ஒரே உண்மைதான். அதைப் பார்க்கின்ற முறையில் பார்த்தால் இலைத்தும் இருக்கின்றது. இதயத்தை அள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது; எல்லாம் அது புனைந்து கொள்ளும் ஆடையைப் பொறுத்தது. பலா மரத்தை நாம் எத்தனையோ முறை பார்த் திருக்கின்றோம். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்' என்ற நியதிக்கு உள்ளான மக்கள் இனத்தார் எத்தனை பேரோ அதைப் பார்த்து மடிந்திருக்கின்றார்கள். ஒருவன் அதனுடைய இலட்சிய வடிவான அழகை மனமாரப் பருகி யிருக்கின்றான். ஏனென்றால் அவன் கவிஞன். கவிஞ. னுக்கு நம்மைவிட எவ்வளவோ மேலான அறிவு உண்டு. உணருகின்ற ஆற்றலும் உண்டு. மற்றும் உணர்ந்ததை உணர்த்துகின்ற ஆற்றலும் உண்டு. இன்னும் ஓர் அருமைப் நி-12