பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷岛盘 நினைவுக் குமிழிகள்-3 அவலக் கவலை, கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பா லுடையது மக்கள் யாக்கை' என்று மக்கள் உடம்பின் சிறப்பியல்புகளுக்கு இனிய பல்லாண்டு கூறும் தத்துவத்தை மனத்தில் ஊட்டலாம். பாரதியாரிடம் போய் இதைச் சொன்னால் அடிக்க வந்து விடுவார். குடும்பத்தில் இருப்போருக்கு இந்த வார்த்தை பொருந்துமா? அவச் சொல் அன்றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோல் நிற்கின்றாள் மனைவி. நமது துயரத்துக் கெல்லாம் கண்ணிர் விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சி யின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தை களை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கின்றேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?”...... என்று முழங்கிவிடுவார். இவர் காட்டும் தத்துவம் இத்தகையது. இவர் உருவாக்கும் மனப்பான்மை இந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இப்படியெல்லாம் கவிதையைப் பல்வேறு விதமாக விளக்குபவர். 'கவிதை என்பது ஒரு கலை. ஒரு சிருஷ்டி சாதனம். அது மக்களிடையே இயல்பாகவே நிலவி வருகிறது. அதை அழிக்கவே முடியாது’’ என்று வெட் டொன்று, துண்டு இரண்டாகப் பேசுவார். பின்னர் கவிதையின் இன்றியமையாத கூறான வண்ணத்தைப் L is (Rythm), —8populf–9(5Gololil issG) (Harmony) என்பதுபற்றி விளக்குவார். எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் தருவார். கவிதையில் காணப்படும் சொற். களுக்கு வெறும் சொற்பொருளேயன்றி தொனிப் பொளும் உண்டு என்று இயம்பிப் பல எடுத்துக்கிாட்டு 多。 மணிமேகலை-பளிக்கறை புக்ககாதை-வரி 1 13-1 20° 3. பர்ர்தியார்: கீட்டுரைகள்