பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி வளாகத்தில் விழாக்கள் - - 183 என் இல்லம் வந்து ஐயா, நம் முத்துசிவம் இயற்கை எய்தினார்' என்ற செய்தியைக் கூறிவிட்டுச் சென்றார். கல்லூரி சென்றதும் நானும் முதல்வரும் சென்று மறைந்த பேராசிரியருக்குக் கல்லூரி சார்பாக ஒரு மலர் வளையம் வைத்துத் திரும்பினோம். நள்ளிரவில் மாரடைப்பால் மறைந்தார் என்று அறிந்தோம். ஓயாது புகைத்தலால் தான் இவ்விளைவு நேரிட்டிருக்கக் கூடுமோ? என்று நினைத்துக் கொண்டேன். நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு". குமிழி-128 22. கல்லூரி வளாகத்தில் விழாக்கள் கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள் சமுதாய உணர்வை எழுப்பும். மாணாக்கர்களிடையே குறிக்கோள் தன்மையை வளர்க்கும். வள்ளவின் நீள்நோக்கு (Far sightedness), (psör GT5frág (Fore-sightedness) lurra: Gng. யும் சிந்திக்க வைக்கும். நான் அங்குப் பணியாற்றும் போது, நடைபெற்ற சில விழாக்களை இக்குமிழியில் நினைவு கூர்கின்றேன். மாதிரிப் பள்ளிதிறப்பதற்கு விழா ஒன்றும் அமையவில்லை. பயிற்சிக் கல்லூரி திறப்பதற்கு, கல்லூரி திறப்பதற்கு முதல் ஆண்டே (நான் பள்ளியில் சேர்வதற்கு முன்பே) ஏதாவது ஒரு விழா நடைபெற்றிருக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் எந்த விழா எடுத்தாலும் அது கலைமகள் விழாவாகவே இருக்கும். பெரிய அலங்காரக் 4. குறள் -336 (நிலையாமை.-6)