பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - நினைவுக் குமிழிகள்-3 கொட்டகைகள் அமைத்தல், மேடை ஏற்பாடு, விருந்தினர் கள் வசதியாக அமர இருக்கை வசதிகள் இவை செவ்வனே ஏற்பாடாகியிருக்கும். பெரும்பாலும் விழாக்கள் மாலை நேரத்தில் நடைபெறுவதால் விளக்கு வசதிகள், அலங்கார வண்ண விளக்குகள் இவற்றிற்கும் ஏற்பாடாகி இருக்கும். அந்த ஊரில் இத்தகைய விழாக்களுக்குக் கூட்டம் அதிக மாகவே இருக்கும். எல்லாக் கல்லூரிகளின் ஆசிரியர்களே இரு நூறுக்கு மேற்பட்டவர்கள்; கார் வைத்திருக்கும் பெரு மக்கள் கூட்டம் வேறு. பெரும்பாலும் கூட்டம் முடிந்து அன்று அல்லது மறுநாள் இரவு விருந்தும் இருக்கும். பொறியியற் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் போடும் விழாவிற்கு குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாத்தும், கட்டடத் திறப்பு விழாவிற்குத் துணைத் தலைவர்டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணனும் வந்திருந்தார்கள் மேடையிலிருந்து கொண்டே மின்விசைப் பொத்தானை அழுத்தியதும் பெரிய கதவுகள் தாமாகத் திறக்கும் ஏற்பாடு வருகை புரிந்தோர் அனைவர் கவனத்தையும் கவர்ந்து வியப்பினைத் தந்தது. முற்பகல் திறப்பு விழா இருந்தால், மாலை 7, 7 மணிக்குத் தாமாகஎடுத்து உண்ணும் (Buffet) விருந்து தவறாமல் இருக்கும். பொறியியற் கல்லூரித் திறப்பு விழாவில் எல்லா நிலைக்கல்வியும் அமைந்த இந்தக் கல்லூரி வளாகத்தில் மருத்துவக் கல்விக்குத்தான் வசதி செய்யப் பெறவில்லை என்றும், அதற்கும் வழி செய்யப் பெற்றால் பல்கலைக்கழகமே ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் துணைத் தலைவர் குறிப்பிட்டதாக நினைவு. டாக்டர் வள்ளல் விரைவாகச் செயலாற்று வதைப்போல் செயலாற்றும் இன்னொருவரைக் காண்டல் அரிது. டாக்டர் வள்ளல் ஒரு கர்ம வீரர்; கர்ம வீரர் என்று சொல்லுவதைவிடக் கர்மயோகி’ என்று சொல்லுவதில் சிறப்பு உண்டு. வாழ்க்கையில் அமைத்த செயல்கள் அனைத்தையும் ஒருவித வேள்வியாகச் செய்கின்றவர்