பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii ஏற்படுத்திக் கல்வி முன்னேற்றத்தில் பேரார்வம் காட்டு பவர். "நல்லவர்: மனத்து ய்மையுடையவர். ; வல்லவர், விரைந்து செயற்படும் வேந்து. என்பால் அளவற்ற அன்பும் மரியாதையும் காட்டி வருபவர். நகரத்தார் களிடம் காணப்படும் எல்லா நற்பண்புகளையும் இவரிடம் காணலாம். சோம்பல் ஒன்று மட்டும் இவரிடம் காண முடியாதது. பம்பரம்போல் சுழன்று பணியாற்றுபவர். இத்தகைய என் கெழுதகை நண்பரின் அணிந்துரை இந் நூலுக்குப் பெருமை அளிக்கின்றது. யானும் பேறு பெற்றது போன்ற பெருமை அடைகின்றேன். அணிந்துரை அளித்த அன்பருக்கு உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. ஒய்வு பெற்ற நிலையில் எனக்கு உடல் நலமும் மன. வளமும் எதையும் தாங்கும் இதயமும் நல்கி என்னைத் தமிழ்ப் பணியில் ஈடுபடுத்தியும் சமய நூல்கள் வெளிவரக் கணிசமான அளவு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் நிதி வழங்கியும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் ஏதோ ஒரளவு நிதி கிடைக்க உதவவும் வழியமைத்துத் தந்தும் என்னை வாழ்விக்கும் வேங்கடம் மேய விளக்கினை , இன்று ஆக நாளையே ஆக,இனிச் சிறிது கின்றுஆக கின் அருள் என் பாலதே; நன்றாக கான் உன்னை அன்றி இலேன் கண்டாய், காரணனே! cஎன்னை அன்றி இலை." - திருமழிசையாழ்வார் என்ற ஆழ்வார் பாசுரத்தால் மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்கிச் சரண் அடைகின்றேன். வேங்கடம்’ AD-13; (Plot 3354) க. சுப்புரெட்டியார் அண்ணாநகர் தொ.பே. 62 15583 சென்னை-600 4ே8 தவம்பர் 29, 1989 6. நான்முகன் திருவந்தாதி-7