பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"g 186 நினைவுக் குமிழிகள்-3 கர்மத்தைச் சிறந்த முறையில் கைய7ளுமிடத்து அது வேள்வி என்று பெயர் பெறுகின்றது. வாழ்க்கை என்ற கர்மத் தைப் பண்புடன் செய்தால் அது யாகமாகின்றது. இங்ங்னம் உயிர்கள் அனைத்தும் வேள்வி செய்தால்: தொகைவினை மயமாகவுள்ள இயற்கையே சிறப்புற்று. விளங்குகின்றது. உயிர்கள் வேள்வியைப் பயன் சுருதிச் செய்தால் ஆக்கத்தை அடைகின்றன. பயன் கருதாதுநிஷ்காமியமாகச்-செய்தால் ஆக்கத்தையும் அடைகின்றன: பெரும்பேறு ஆகிய முக்தியையும் அடைகின்றன. பலன் கருதியோ, பலன் கருதாதோ யு.ாகம் செய்கின்ற அளவு இயற்கை தெய்வ சொரூபமாகத் திகழ்கின்றது. பூலோகத் தைத் துறக்க மயமாக ஆக்குதல் மனிதனுக்குச் சாத்திய மாகின்றது. ஒன்றுக்கும் உதவாத பாழ் நிலத்தைப்பாலைவனம்போல் கிடந்த நிலத்தைப் பாங்குடன் திருத்தி கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயில்கள் செயற்படும் இடமாக்கினார் வள்ளல். இதனால் இவர் கர வேள்வி செய்தவராகின்றார். கல்வியைப் பெருக்குதல்: நர வேள்வியில் அடங்கும் செயல்களில் ஒன்றாகும். பொறியியற் கல்லூரி செயற்படத் தொடங்கிய பிறகு, மருத்துவக் கல்லூரியின் நினைவு டாக்டர் வள்ளலின் உள்ளத்தில் உதித்திருக்க வேண்டும். பயிற்சிக் கல்லூரிக்கு, எதிர்ப் பக்கத்தில்-நெடுஞ்சாலைக்குத் தெற்குப் புறத்தில் -ஒரு பெரிய மருத்துவமனை ஒன்றைத் திட்டம் செய் தார். 500 அல்லது 1000 படுக்கை வசதியுள்ள மருத்துவ மனை இல்லாமல் மருத்துவக் கல்லூரி இயங்க முடியாது. பயிற்சிக் கல்லூரிக்கு மாதிரி உயர்நிலைப் பள்ளி இன்றி யமையாது என்று கருதி கல்லூரி தொடங்கப் பெற்ற அடுத்த ஆண்டே மாதிரி உயர் நிலைபள்ளியைத்தொடங்க. ஏற்பாடு செய்த வள்ளல் தீர்க்க தரிசனம்-நீள் பார்வை - உடையவராதலால் மத்திய அரசின் நலவாழ்வு அமைச்ச 1. ஐம்பெரும் வேள்விகள்: தேவ யக்ஞம் ரிஷியக்ஞம்: பிதிர்யக்ஞம், நரயக்ளும், பூத ய்க்ளும் என்பவை.