பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி வளாகத்தில் விழாக்கள் s: 87° ராக இருந்த இராஜ குமார் அமிர்த கெளர் என்பாரைக் கொண்டு பெரிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு வித்தார். அடிக்கல் நாட்டு விழா சீரும் சிறப்புமாக நடை பெற்றது. ஆனால் இன்று வரை மருத்துவமனையே’ அமையவில்லை. வள்ளலைப் பற்றியிருந்த தொழு நோயின் வேகம் அதிகரித்து உடல் நிலையும் குன்றியதால் அவர் கண்ட கனவுகள் எல்லாம் தடைப்பட்டன. வள்ளலும் 5-4-1957- ல் திருநாடு அலங்கரிக்கவே. வளர்ச்சி நிலை நின்றது. இதுகாறும் தொடங்கப்பெற்ற நிறுவனங்கள் எல்லாம் செவ்வனே நடைபெற்றால் போதும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. மாணாக்கர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதிகள் செய்ய வேண்டும் என்று நினைத்தார் வள்ளல். முதலில் கலைக் கல்லூரிக்கு ஒரு விடுதி அமைத்தார். அதைத் தம் அன்னையார் பெயரை உமையாள் விடுதி” என்று பெயர் சூட்டினார். இஃது உலக அன்னைக்கும் பொருத்தும். மனிதன் பெற்றுள்ள உடல் வாழ்க்கையில் தன் முன்னோர் கட்குக் கடப்பாடு உடையவன் ஆகின்றான். அவர்கள் எவ்வுலகில் இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக என்று. அவர்களை குறித்து நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். இதுவே பிதிர் வேள்வி என்பது. திதி செய்வதும் இந்த அடிப்படையில் தான். உயிரோடிருக்கும் பெற்றோர் கட்கும் நாடோறும் பணிவிடை செய்வதும் பிதிர் வேள்வி யின் பிரிவினையாகும். அடுத்த ஆண்டிலேயே மற்றொரு விடுதியைக் கட்டி தனது தொழில் நண்பர் மங்கோம்பு ஆண்டி அய்யர் என்பாரின் நினைவாக மங்கோம்பு ஆண்டி அய்யர் விடுதி” என்ற திருநாமம் சூட்டினார். இது திறப்பதற்குப் பெரிய விழாவொன்று எடுத்ததாக நினைவு. ஆசிரியர்கள் தங்குவதற்கும் பல வீடுகள் கட்டுவித்தார்.