பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நினைவுக் குமிழிகள் பொறியியல் கல்லூரி மாணவர்கட்கும் விடுதிக அமைத்தார். பொறியியல் கல்லூரி தொடங்கப் பெற் அடுத்த ஆண்டிலேயே பல் தொழில் பயிற்சி நிறுவன (Politechnic) ஒன்று தொடங்கப் பெற்றது. இதி பயிலும் மாணவர்க்கென விடுதியொன்று அமைத்தார் இந்த விடுதி அரைவட்ட வடிவில் அமைந்தது. இதனை, திறப்பதற்கு எடுக்கப்பெற்ற விழா இன்றும் என் உள்ள தில் பசுமையாக உள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்தவர் அக்காலத்தில் மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்த சிந்தாமணி தேஷ்முக்; விடுதியை யும் அவர்தாம் திறந்தார். இதற்குக் கே. என். மாணவ விடுதி” என்று பெயர் சூட்டப் பெற்றது. இதன் திறப்பு விழாவில் வள்ளல் அழகப்பர் பேசிய பேச்சு இன்னும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. இந்த விடுதிக்குப் பெயர் வைத்தவரலாற்றைச்சுவையாக, கேட்போர் மனம் உருகும் வண்ணம் அற்புதமாக, எடுத்துக் கூறினார் வள்ளல். ஒரு சமயம் வள்ளல் அழகப்பர் பம்பாயில் தாஜ்மகால் விடுதி யில் தங்கியிருந்தபோது கோயம்புத்துார் தொழிலதிபர் நாயுடு ஒருவரும் (பெயர் நினைவு இல்லை.) அதே விடுதி யில் தங்கியிருந்தாராம், வள்ளலும் அவரும் இனிய நண்பர்கள். இன்னும் வள்ளலின் பல நெருங்கிய தொழி லதிய நண்பர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனராம். அச்சமயத்தில் வள்ளல் பங்குச் சந்தையில் (Share market) அதிகமாக ஈடுபட்டிருந்தாராம். ஒரு நாள் பங்குகளின் விலைகள் மிகவும் சரிந்து விட்டனவாம். பல இலட்ச ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாம். வள்ளல் இனி தலை தூக்க முடியாது என்று பலர் பேசிக் கொண்ட அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதாம். இம் மாதிரி ஒருவர் நிலை மோசமாகி விட்டால், நெருங்கிப் பழகும் நண்பர் களும் விலகிப் போவர் என்பது உலகியல். காரணம், உதவி கேட்பார்கள் என்று ஒதுங்கிப் போவர். வள்ளல் தம் அறையில் சோகத்துடன் இருந்த போது நாயுடு அவர்கள்