பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 90 நினைவுக் குமிழிகள்-3 அரசு முன் வந்தால் 300 ஏக்கர் நிலமும் 15 இலட்சம் பன மும் தருவதாக அறிவித்தார். பிரதமர் நேரு அந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர். வள்ளல் கூறியவுடன் வள்ளவின் விரிந்த மனநிலையைக்கண்டு வியப்பெய் தினார். காரைக்குடியில் ஆய்வு நிலையம் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் எனத் தானும் அறிவித்தார். செயல்கள் விரைவாக நடைபெற்றன. 1952 இல் ஆய்வு நிலையமும் தோன்றியது. வள்ளல் எப்பொழுதும் கையிருப்பில் உள்ள செல் வத்தைக்கொண்டு இம்மாதிரிக் கொடையாக வழங்கு வதில்லை. இல்லாத செல்வத்தைத்தான் இம்மாதிரி வழங்குவதாகச் சொல்வதுண்டு. சொன்னபிறகுதான் அதை ஈட்டி விரைவில் வழங்கிவிடுவார். இதற்கு ஆண்ட வனும் அவருக்குத் துணை நிற்பான். பிறக்கும்பொழுது கொடுவந்தது இல்லை பிறந்துமண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை இடைநடுவில் குறிக்கும்.இச் செல்வம் சிவன்தந்தது என்று” நினைத்து அள்ளி அள்ளி வழங்குவார். திருமகளைக் கலை மகளுக்கு வழங்குவது தனிச்சிறப்பு. மருமகள் மாமியார் மீது கொண்டுள்ள பேரன்பு இவர்தம் செயலால் அறிய முடிகின்றது. 2. பட்டினத்துப்பிள்ளையார் பாடல்கள்-திரு ஏகம்பமாலை-7