பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-129 23. நகை வணிகர்களின் தொடர்பு கிரிடோறும் கல்லூரிப் பணி மாலை 4-15 க்கு நிறைவு பெறும். வேறு பணிகள் இல்லாவிடில் 4-45 க்கு இல்லம் வந்து சேர்வேன். மாலைக் கடன்களை முடித்துக்கொண்டு சிற்றுண்டி அருந்தியவுடன் குழந்தை இராமலங்கத்தைத் துரக்கிக் கொண்டு கல்லுக்கட்டியைச் (குளத்தைச்சுற்றிலு முள்ள நான்கு பக்கங்கள்) சுற்றுவேன். குழந்தை வெளியில் போக வேண்டும் என்று துடிப்பான். வேடிக்கைக்காட்டிக் கொண்டே கடைத் தெருவைச் சுற்றுவேன். கண்ணில் பட்ட விளையாட்டுச் சாமான்களை வாங்கி வருவேன். இப்போது கிடைப்பது போல் அக்காலத்தில் (1950) அதிக மான பிளாஸ்டிக் சாமான்கள் கிடைப்பதில்லை. இப் போது சிற்றுார்களில் கூட விதவிதமான சாமான்கள்கண்னைக் கவரும் பல வண்ணச் சாமான்கள்-ஏராள மாகக் கிடைக்கின்றன. இப்பொழுது என் பேரப் பிள்ளைகள் அவற்றை அநுபவிக்கின்றனர் உடைபட்டு வீணாகின்ற சாமான்கள்தாம் அதிகம். காரைக்குடியில் இருந்த பத்தாண்டுக் காலத்தில்" மூன்று, நான்கு முறைகள் நகைக்கடையில் வேலை வைத்துக்கொண்டேன். M.S. இராஜமாணிக்கம் செட்டி யார் முதலில் பழக்கமானார். எப்படிப் பழக்கமானார் என்று இப்போது நினைவுகூர முடியவில்லை. என் நண்பர் திரு. V. சொக்கலிங்கம்பிள்ளை (நகராண்மைக்கழக உயர் நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்-இவர் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1940-41 ஒரு சாலை மாணாக்கர்) சில் சமயம் அக்கடையில் மாலை நேரத்தில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். அவரால்தான்