பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - நினைவுக் குமிழிகள்-3 சமயம் இத்தகைய நல்ல மோதிரங்களைத் தயார் செய்து அதிக விலைக்கு விற்பதுண்டு’ என்று மேலும் கூறினார். காரைக்குடியில் இருந்தவரை ஐந்தாறு முறை இத்தகைய மோதிரங்கள் கைமாறுவதைக் கண்டிருக்கின்றேன். இஃது எனக்கு ஒருவித வியப்பும் வேடிக்கையுமாக இருந்ததே யன்றி எனக்கு இதன் மீது கவர்ச்சி ஏற்படவில்லை. ஜமீன்தார்கள், சுகவாசிகள், பெரிய மிராசுதார்கள் இவர், தள்தாம் இதனைப் பெருமையாகத் தரித்துக் கொள்வார் கள்: தரித்துக் கொண்டிருப்பதையும் பார்த்திருக் இன்றேன். காரைக்குடிக்குச் சென்ற மறு ஆண்டில் }லக்கியப் பதிப்பகம் சோமய்யா அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஒரு செய்தி சொன்னார். பேராசிரியர் அவர்களே, ஒர் அற்புதமான சரக்கு என் கைக்கு வந்துள்ளது. அது உங்களிடம் இருப்பது நல்லது என்று நினைத்து ஒதுக்கி வைத்திருக்கின்றேன்' என்றார். எனக்கு அதைப் பார்க்க ஆவல். என்ன சோமய்யா அது? அதனைப் பார்க்க வேண்டுமே என்றேன். அச்சமயத் தில் யாரும் அருகில் இல்லை. உள்ளே சென்றார். ஒரு பச்சைக் கல்லாலான (கண்ணாடி?) ஒரு சிறு பிள்ளையா ரைக் கொணர்ந்து காட்டினார். விலை கூட அதிகம் இல்லை. ரு 300 = தான். உங்களிடம் அது இருந்தால் உங்கள் உழைப்பு மேலும் மேலும் வளர்ந்து வெற்றிப் பாதைக்குக் கொண்டு செலுத்தும்' என்று சொன்னார். நான் அதை வாங்கிப் பார்த்தேன். மிக அழகான பிள்ளையார்தான். அது கல்லால் ஆனது அன்று என்பது தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.கண்ணாடியால் ஆனது என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டேன். கல்லால் ஆனதாக இருந்தால்தான் என்ன? இதை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும் என்று சோமய்யா கூறுவதில் நம்பிக்கை இல்லை. பிள்ளையாரைப் பெருகுவன்ன அருகா நோக்கமொடு நன்றாகத் திருப்பித்