பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நினைவுக் குமிழிகள்-3

  • பச்சையை' மெதுவாக எடுத்து நீட்டினார். செட்டியாருக்கு இத்தகைய பொருள்மீது பற்றும், இது போன்ற பொருள் தன்னிடம் இருந்தால் இதன் இராசியால் தமது செல்வம், செல்வாக்கு எல்லாம் மேன்மேலும் பெருகும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடையவர் என்பதை நன்கு அறிந்தவர் தரகர். சரியான கொம்பைத், தான் பிடித்தார்.

செட்டியார் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அவர் முகபாவத்திலிருந்தே அவருக்குப் பச்சைமீது பற்றும் பாசமும் வளர்கின்றன என்பதைச் சரியாகக் கணிக் கின்றார் தரகர். சரியப்பா, சரக்கு எனக்குப் பிடித்திருக் கின்றது. என்ன விலை?' என்று செட்டியார் கேட்க, * அதிகம் இல்லை முதலாளி, ஒரு பத்தாயிரம் தான்’ என்று தரகர் சொல்ல, உடனே செட்டியார் உள்ளே சென்று பத்தாயிரமாக நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்து பச்சையைப் பெற்றுக் கொண்டார். பச்சையைப் பரிவுடன் பெற்றுக் கொண்ட செட்டியாரின் முகத்தில் பிரகாசத். தைக் கண்ட தரகர், முதலாளி, இந்த அற்புத வஸ்துவை எவரிடமும் காட்டாதீர்கள். தண்டவாளப் பெட்டியின் அடியில் போட்டு வையுங்கள்' என்று சொல்லி விடை. பெற்றுக் கொண்டார். இரண்டாண்டுகள் கழித்து செட்டியார் பம்பாய் செல்ல நேர்ந்தது. நினைவாகப் பச்சையை எடுத்து வைத்துக் கொண்டார். பம்பாயில் ஓர் இரத்தின வியாபாரியிடம் காட்டி மதிப்பு போடும் படி சொல்ல, அந்த வியாபாரி, யார் இதைத் தந்தது? வெறும் கண்ணாடித் துண்டு. ஐந்து ரூபாய் கூட இதற்கு, விலை இல்லை' என்று சொல்லி விட்டார். படுபாவி என்னையே ஏமாற்றி விட்டானே!' என்று நினைத்துக் கொண்டார் செட்டியார். - ஊர் திரும்பியதும் முதல் வேலையாகத் தரகரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து, டிரைவர், காரை