பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைவணிகர்களின் தொடர்பு 197 எடுத்துக் கொண்டு காரைக்குடி செல். அந்தத் தரகன் (பெயரைச் சொல்லி) கல்லுக் கட்டியில்தான் சுற்றிக் கொண்டு இருப்பான். எப்படியாவது அவனைக் கண்டு நான் சொன்னதாகக் கூட்டிவா என்று ஆணையிட்டார். டிரைவருக்கு ஒன்றும் புரியவில்லை. செட்டியார் எப்படியோ ஏமாந்து விட்டார் என்பது மட்டிலும் அவனுக்குப் புரிந்தது. காரைக்குடி வந்து தரகரைக் கண்டு அவரைக் காரில் கூட்டிக் கொண்டு சென்றார் டிரைவர். வண்டியில் போகும் போதே தரகரின் மூளை செயற்படத் தொடங்கியது. டிரைவரை என்ன விஷயமாக என்னைக் கூட்டி வருமாறு சொன்னார் செட்டியார்?' என்று கேட்க அவர் எனக்குத் தெரியாது’ என்று சொல்லி விட்டார். விரைவில் கார் கானாடுகாத்தானை அடைந்தது. செட்டியாரைக் கண்ட தரகர் ஒரு கூழைக் கும்பிடு போட்டு நின்றார். டேய் படுபாவி, என்னையே ஏமாற்றி விட்டாயே’’ என்று கோபத்துடன் கேட்டார். என்ன முதலாளி, பச்சையை யாரிடமாவது காட்டினிர் களா?' என்று பதற்றத்துடன்கேட்க, அவரும் பம்பாயில் ஒர் இரத்தின வியாபாரியிடம் காட்டினேன். அவர் ஓர் ஐந்து ரூபாய் கூட இதற்கு மதிப்பு இல்லை. இது வெறும் கண்ணாடி என்கின்றான்' என்று சொல்ல, தரகர், ’ என்ன முதலாளி, நான்தான் யாரிடமும் இதைக் காட்டாதீர்கள். இதை மதிக்க ஒருவருக்கும் தெரியாது என்றேனே. ஏன் முதலாளி காட்டினர்கள்?’ என்று செல்லமாகக் கொஞ்சி, ஒன்றும் பேசாமல் பெட்டியின் அடியில் போடுங்கள்!' என்று கூறினார். தொடர்ந்து, இது வந்த பின் உங்கள் செல்வாக்கையும் செல்வ வளர்ச்சியையும் கவனித்தீர்களா? உங்கட்கு என்ன குறை? கல்லூரிகட்குத் தாளாளராக இருக்கின்றீர்கள். எட்டுத் திக்கும் உங்கள் புகழ் டால் அடிக்கின்றது. கொடைக் கானல் தொழில் காமதேனுபோல் சுரந்து கொண்டிருக் கின்றது. இன்னும் பாருங்கள். நீங்கள் எவ்வளவோ