பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 நினைவுக் குமிழிகள்-3 அதிக விலை தந்துவிடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு’ என்றார். இன்றுவரை வைரச்சாமான்களே வாங்க வில்லை. இன்று வைரச்சாமான்களின் விலை பன்மடங்கு ஏறிவிட்டது. அப்போதே கொஞ்சம் வாங்கி வைத்திருந் தால் பேத்திகட்கு உதவுமே என்று சபல புத்தி உணர்த்து கின்றது, அப்போதாவது சிறிதளவு பணம் இருந்தது; இப்போது அன்னக் காவடி ! இதனால் வைரத்திற்கும் எனக்கும் ஸ்நாகப் பிராப்தி கூட இருக்காது என்பது உறுதியாய் விட்டது. பற்றுகளும் ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டே போகின்றன. - நகைக்கடைக் குப்பை குப்பை என்றாலே செல்வம் என்பது பொருள். நம் வீட்டுக் குப்பை பயன்படாது. நகைக்கடைக் குப்பை விலையுயர்ந்தது. கோலார் தங்க வயல் மண்ணையொத்தது. ஒரு சமயம் என் நண்பர் சிவ. ராம. தனுஷ்கோடிச் செட்டியார் தமது கடையின் ஒராண்டுக் குப்பையை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார். குப்பையை வாங்கியவர் அக்குப்பையில் நாற்பதாயிரம் பெறுமான தங்கம் எடுத்ததை அறிந்தார். அடுத்த ஆண்டு முதல் குப்பையை விற்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார். தாமே அதைத் தூய்மை செய்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது என்று திட்டம் போட்டு அதைச் செயற்படுத்தினார். அவர் வீட்டில் கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்றினால் நேராக ஒரு குழியில் விழுமாறு சிறு கால்வாய் அமைத்தார், கால்வாயைச் சீமைக்காரையால் பூசினார். இந்தக் குழியினருகே வேறு இரண்டு குழிகள். இந்த மூன்று குழிகளையும் சீமைக்காரை (Cement) யால் பூசச் செய்தார். முதல் தொட்டியில் நீர் நிரம்பியதும் வழியும் நீர் அடுத்த தொட்டியில் விழும்; இத்தொட்டி நிரம்பிய ம் இதிலிருந்து வழியும் நீர் அடுத்த தொட்டியில் விழும். இப்படி மூன்று தொட்டியில் நீர் ஒன்றிலிருந்து பிறிதொன்றிலும், இதிலிருந்து அடுத்த தொட்டிற்கும்