பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைவணிகர்களின் தொடர்பு 多伊贾· விழும். முதல் தொட்டியில் நான்கு தட்டு குப்பைகள் கொட்டப் பெற்று நன்றாகக் கிளறிக் கலக்கப்பெறும். கனமான பொருள்கள் அடியில் படியும். மிதக்கும் பொருள் அகற்றப்பெறும். முதல் தொட்டியின் அடியில் படிந்திருக் கும் பொருள் அடுத்த தொட்டிக்கு மாற்றி அதில் நன்குக் கிளறிக் கலக்கப்பெறும். இங்கும் மிதக்கும் பொருள் அகற்றிப் பெற்று அடியில் படியும் பொருள் அடுத்த (மூன்றாவது) தொட்டிக்கு மாற்றப்பெறும். இங்கும் படிந்த பொருள் கலக்கப்பெறும். இங்குப் பெரும்பாலும் மிதக்கும் பொருள் இராது: ஏதாவது இருந்தால் அஃது அகற்றப் பெற்று, சேறே இல்லாத மண்டி கிடைக்கும். இரண்டு கூலியாள்களைக் கொண்டு இரண்டுமூன்று மாதங் கள் செய்யப்பெற்றாலும் கூலி ரூ 400க்கு மேற்படாது. இந்த மண்டியிலிருந்துதான் பாதரசம் போன்ற பொருள்களைத் சேர்த்துத் தங்கம் பிரித்தெடுக்கப் பெறும். இப்போதுதான் செட்டியாருக்கு வேலை; ஒரு பொற் கொல்லர் இதற்குத் துணையாக இருப்பார். ஓராண்டு ஐம்பது சவரன் கிடைத்ததாகச் சொன்னார். இதனை அமிலத்தில் கரைத்துப் பத்தரை மாற்றுத் (24 காரட்) தங்கமாக மாற்றுவார். இதில் 2 காரட் அளவுக்கு செம்பு (தாமிரம்) சேர்த்துப் பணித்தங்கமாக (22 காரட் மாற்று வார், இப்படி மாற்றியதால் 55 சவரன் கிடைத்ததாம். இன்னோர் ஆண்டு 65 சவரன் கிடைத்ததாம். இந்த வருவாய் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் வருவதற்கு முன். 1965 முதல் வேலை குறைந்தது. இப்போது ஒரு பொற் கொல்லர் கூட அவர் கடையில் வேலை செய்யவில்லை. மெழுகின் துணை : ஒவ்வொரு நகைக் கடையிலும் பெரிய சாத்துக்குடிப்பழம் அளவுக்கு இரண்டு அல்லது மூன்று மெழுகு உருண்டைகள் இருக்கும். இவை தவிர சமச்சாணிக் கொத்து ஒன்று காக்கித் துணியில் சுற்றி வைக்கப் பெற்றிருக்கும் இந்தக் கொத்தில் ஒரு சாண் நீளத்திற்கு 22, 21, ...... 6 காரட் மதிப்பில் தட்டை