பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£62 நினைவுக் குமிழிகள்-3 வடிவில் 16 மச்சாணிகள் இருக்கும். ஒருவர் ஒரு தங்க. நகையை விற்கக் கொண்டு வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஒரு கட்டளைக் கல்லில் உரைப்பார்: அதை உத்தேசமாக மதிப்பிட்டு (18 காரட்டு, 18 காரட்டு மச்சாணியை அதன் அருகில் உரைப்பார். இரண்டும் பொருந்தினால், அந்த இரண்டு உரையையும் மெழுகில் ஒற்றி எடுத்து மீண்டும் சரி பார்ப்பார். பொருந்தாவிடில் மீண்டும் நகையைக் கல்லில் உரைப்பார்; இப்போது அடுத்த கீழான மச்சமுடைய ஆணியை அதன் அருகில் உரைத்துச் சரி பார்ப்பார்; இவற்றை மெழுகில் ஒற்றி எடுத்து மீண்டும் சரிபார்ப்பார். இப்படிப் பலமுறை. பார்த்த பிறகுதான் நகைத் தங்கத்தின் காரட் அறுதி யிடப்பெறும் பின்னர் நகையின் விலையை அறுதியிட்டு வாங்குவார். இந்தச் கெயல்களில் விற்கப் பெறும் நகையின் உரைப் பொடிகள், மச்சாணிகளின் உரைப் பொடிகள் மெழுகில் சேர்ந்து கொள்ளும். ஒரு சமயம், ஆண்டுப் புதுக்கணக்குப் போடும் நிகழ்ச்சிக்குப்போயிருந்தேன். புதியனவாக மூன்று மெழுகு உருண்டைகள் பூசைக்குரிய பொருள்களாக இருந்தன. ரூ. 105|= ஐப் புதுக் கணக்கில் வரவு வைத்தேன். துப் பத்து இரண்டாயிரத்து இருபது என்று பல மறுநாள் காலை ரூ 5 = ரூ 10 - ரூ.20 = மட்டிலும் வைத்துக் கொண்டு பெருந் தொகைகள் திருப்பித் தரப்பெறும். பூசை முடிந்த பிறகு எல்லோருக்கும், குளிர் பானம், காபி வழங்கப் பெற்றன. அப்போது என்னிடம் சொன்னார்: 'தங்கள் போன்ற அன்பர்கள், பெரியோர்களின் ஆசி யாலும், இறைவன் அருளாலும் வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றால் இந்த மூன்று மெழுகு உருண்டைகளும், இந்த ஆண்டில் சேரும் குப்பைகளும் என் மகள் திருமணத். திற்குப் போதும்' என்று கூறினார். காரைக்குடியிலிருந்த போது இவ்வாறு நகைக் கடைக்காரர்களின் தொடர்ப்ால்: சிறிது அநுபவம் ஏற்பட்டது.