பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு V. சொக்கவிங்கம்பிள்ளை あóア பிட்ட கம்பெனியில் உற்பத்தி செய்யப்பெற்றவை வாங்கப் பெறல் வேண்டும் என்பது கல்வி இயக்குநரின் சுற்றறிக் கைக் கடிதம். நகராண்மைக் கழக ஆணையர் அவர் இச்சைப்படி வேறோர் கம்பெனியாரால் உற்பத்திசெய்யப் பெற்றவைகளை வாங்கிவிட்டார்; அதிகாரம் அவருக்கு இல்லையானாலும் இத் தகாத காரியத்தைச் செய்து விட்டார். அவற்றின் விலையைக் கம்பெனிக்கு அனுப்பு மாறும் ஆனை பிறப்பித்து விட்டார். பாவம், சொக்கலிங்கம்பிள்ளை என்ன செய்வார்? வாய் பேசாமல், எதிர்ப்பு தெரிவிக்காமல், பணத்தையும் அனுப்பிவிட்டார்! தலைவரை எப்படி மீறமுடியும்? ஆணையருக்குக் கம்பெனி யார் ஏதாவது சன்மானம் வழங்கியிருக்க வேண்டும். இது செய்தி சங்கப்பாடல்களில் அடங்கிய இறைச்சிப்பொருள்? போல் இருந்தது என்பது சொல்லாமலே போதரும். அந்த ஆண்டு மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளித் தணிக்கையின்போது இதைக் கண்டறிந்தார். ஆய் வேட்டில் குறிப்பிட்டதோடன்றி தலைமையாசிரியர் சுற்றறிக்கையைக் கவனியாமலோ அல்லது வேண்டு மென்றோ வாங்கியமைக்காக அவர் தம் பொறுப்பில் பன்னிரெண்டாயிரம் ரூபாய் பள்ளிக்குக் கட்டவேண்டும் என்ற ஆணையையும் பிறப்பித்தார். இந்த ஆணையின் நகல்களைக் நகராண்மைக் கழக ஆணையர், கல்வி இயக்குநர், மண்டலக்கல்வி ஆய்வாளர் இவர்கட்கெல்லாம் அனுப்பி வைத்து விட்டார். சொக்கலிங்கம்பிள்ளை இருக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால், கம்பெனிக்குப் பணம் தருமாறு நகராண்மைக் கழக ஆணையர் எழுதிய கடிதத்திற்கு மறுமொழி தரும் வகையில், அரசு சுற்றறிக்கைக் கடிதத்திற்கு மாறாக வேறு கம்பெனியார் உற்பத்தி செய்ததை வாங்கியதும் தவறு என்றும், அவர் ஆணைப்படிக் கம்பெனிக்குப் பணம் அனுப்புவது தன் பொறுப்பல்ல என்றும், ஆணைக்குக் கீழ்ப்படிவது தன் பொறுப்பாதலால் பணம் அனுப்புவதாகவும், பின்னர்