பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.26 8 நினைவுக்குமிழிகள்-3 தணிக்கையின்போது மாவட்டக்கல்வி அதிகாரி இந்தத். தவற்றைக் கண்டறிந்து தன்னைப் பொறுப்பாளியாக்கி னால் அது தன்னைக்கட்டுப்படுத்தாது என்றும் சுட்டிக் காட்டி ஆணையருக்கு மரியாதை தவறாமல் கடிதம் எழுதி யிருப்பேன். இதன் நகல்களை மாவட்டக் கல்வி அதிகாரி, மண்டலப்பள்ளிக்கல்வி ஆய்வாளர், கல்வி இயக்குநர் இவர் கட்கு அனுப்பிவைத்திருப்பேன். பின்னர் வரும் குற்றச் சாட்டிற்கு இக்கடிதம் தற்காப்பு அரணாகவும் அமையும். திரு. சொக்கலிங்கம்பிள்ளை ஒரு வெகுளி; துணிவு இல்லாத, வர். ஆதலால் இவ்வாறு எழுதவில்லை. மாவட்டக்கல்வி அதிகாரி 12 ஆயிரம் பள்ளிக்குச் செலுத்துமாறு எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். நான் மேற்குறிப்பிட்டவாறு கடிதம் எழுதியிருந்தால் அஃது இப்போது துணையாக இருக்குமே என்று சுட்டிக் காட்டினேன். சொக்கவிங்கம்பிள்ளை அவ் வாறு எழுதத் தனக்குத் தோன்றவில்லை என்பதையும் அப்படித் தோன்றினாலும் தனக்குத் துணிவு இல்லை என் பதையும் ஒப்புக்கொண்டார். எனக்கும் அச்சமயம் கழு வாய் ஒன்றும் தோன்றவில்லை; மனம் குழம்பியது. நான் துறையூரை விட்டுக் காரைக்குடிக்கு வந்த பிறகும் ஒரு சில ஆண்டுகள் பள்ளியின் நினைப்பும் இருந்தது. கல்வியதி காரிகளின் மாற்றங்களைப் பற்றியும் நாளிதழ்களில் பார்த்துக்கொண்டும் இருந்தேன். இஃது பூர்வ வாசனையின் உறைப்பால் ஏற்பட்டதன் விளைவு. இப்பழக்கம் இப் போது சொக்கலிங்கம்பிள்ளை விஷயத்தில் துணை செய்வ தாக அமைந்தது. நான் துறையூரிலிருந்தபோது நெருங்கிப் பழகின மாவட்டக்கல்வி அதிகாரியின் நேர்முக அலுவலர் (Personal Assistant) திரு. எஸ். வீராசாமிப்பத்தர் மதுரை மாவட்டக்கல்வியதிகாரியாகப் பணியாற்றியதை அறிந். திருந்தேன். ஆகையால் சொக்கலிங்கம்பிள்ளையை அழைத்துக்கொண்டு ஒரு நாள் மாலை மதுரை சென்