பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 G நினைவுக் குமிழிகள்-3 பின்னர் வந்த வேலையைக் குறித்துப் பேசினேன். திரு. சொக்கலிங்கம் பிள்ளையை அறிமுகப்படுத்தி வைத்தேன். நாங்கள் 1940-41 முதல் சைதையில் பயிற்சிக் கல்லூரியில் பயின்றநாள் முதல் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுப் பேசினேன். எந்தத் தவறும் செய்யாமல் சிக்கல் ஏற்பட்டிருப்பது குறித்து விளக்கினேன். இதற்காக வருந்த வேண்டாம் என்றும், இம்மாதிரித் தொல்லைகள் நேரிடுவது சர்வ சாதாரணம் என்றும், இதனை எளிதாகச் சமாளிக்கலாம் என்றும், இதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித் தார். மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதும் கடிதம் பற்றியும் குறிப்புகள் தந்தார். பிறகு விடைபெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அறையிலேயே கடிதத்தை நல்ல முறையில் தயாரித்தோம். மதுரை யிலேயே அதனைத் தட்டச்சு செய்வித்துக் கையெழுத் திட்டு மதுரை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பினோம். இதன் நகல் மண்டலப் பள்ளி ஆய்வாளர், கல்வி இயக்குநர் இவர்கட்கு அனுப்பப் பெற்றது. காரைக்குடி திரும்பியதும் ஒரு நகல் நகராண்மைக் கழக ஆணையருக்கும் ஆள் மூலம் அனுப்பப் பெற்றது. இவ்வாறு செய்தது எங்கள் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. மூன்று திங்களில் கட்ட வேண்டிய 12 ஆயிரத்தில் 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப் பெற்றது. 8 ஆயிரம் (ஒலி பெருக்கி செட் வாங்கியது) கட்ட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப் பெற்றிருந்தது. ஒரு மாதம் ஆறப் போட்டு இக்கடிதத்திற்கும் சரியான மறுமொழி தரப் பெற்றது. பழைய பல்லவியே புதிய முறையில் சென்றது. மற்றும் மூன்று மாதத்தில் இத்தொகையும் தள்ளுபடி செய்யப் பெற்றது, சொக்கலிங்கம் பிள்ளையின் கவலை அழிந்தது. புதிய தெம்புடன் திகழ்ந்தார்.