பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

数 f2 நினைவுக் குமிழிகள்-3 வழக்கு பற்றியது என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். திரு. அரங்கசாமி ரெட்டியார் ஒரு நாள் குறிப்பிட்டுத் தான் அந்த நாளில் புதுக்கோட்டை அருகிலுள்ள ஒர் ஊருக்கு ஒரு முக்கிய அலுவில் நிமித்தம் வருவதாகவும் (ஊர்ப் பெயர் இப்போது நினைவில் இல்லை) நாங்கள் அங்கு வந்து சந்தித்தால் உதவுவதாகவும் பதில் கடிதம்: எழுதியிருந்தார். வக்கீல் குறிப்பிட்டிருந்தநாளில் அந்த ஊருக்குச் சென்று அவரைச் சந்தித்தோம். சொக்கலிங்கம் பிள்ளை தன் கதையை வக்கிலிடம் ஆதியோடந்தமாக விவரித்து. விளக்கி நோட்டிசையும் அவரிடம் தந்தார். உடனே வக்கீல் பதில் நோட்டீஸ்-க்குத் திட்டமிட்டு அதில் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னர்த் தன்னை நட்டாற்றில் விட்டதுபோல் கை விட்டுச் சென்றபோது தான் கொண்டு வந்த சாமான்களை எடுத்துப் போனதுமன்றி தான் இல்லாத போது தான் போட்ட நகை, தாலிக்கொடி இவற்றையும் (சுமார் நாற்பது சவரன் மதிப்பு), வேறு பல சமான்களையும் எடுத்துப் போய் விட்டதாகவும், தான் பல தடவை தன் இல்லத்திற்கு வந்து வாழுமாறும் நேரில் கேட்டும் கடிதம் எழுதியும் சில பெரியோர்களை அனுப்பி, வருமாறு வேண்டியும் வராமல் அலட்சியம் செய்து விட்ட படியால், இனி முதுமைக் காலத்தில் தான் அவளுடன் வாழ விரும்பவில்லை என்றும், ஜீவனாம்சம் கோருவது: நியாயம் இல்லையென்றும், அப்படி ஏதாவது வழக்கு. தொடர்ந்தால் தக்க வக்கீலைக் கொண்டு எதிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டிஸ் கண்டதும் அடங்கிப் போனார்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. - இதன் பிறகு திரு.சொக்கலிங்கம் பிள்ளை தன் மனைவி யுடன் தான்வாழ்ந்தபோது நேரிட்ட பல திடுக்கிடும் செய்தி களைச்செர்ன்னார்.தன் மாமனார் தன் மகளைக்கொண்டு: