பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடனில் சிக்கிய நண்பரைக்காத்தல் 215 என்றக் குறள்கள் நினைவுக்கு வர நிலையாமை உணர்வால் சிறிது நேரம் தம்பித்துப் போனேன். இறக்கின்றவர்கள் யாவரும் க்யு வரிசையில் நின்று கொண்டு இருப்பது போன்ற காட்சி மனத்தில் தோன்றியது. ஆனால் நான் நிற்கும் இடம் இன்னும் புலனாகவில்லை. இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை’ என்று பாடல் மறையோன் செங்குட்டுவனுக்கு உணர்த்திய அறவுரையுடன் இக் குமிழி அடங்குகின்றது. குமிழி-132 25. கடனில் சிக்கிய நண்பரைக் காத்தல் துறையூரில் நான் பயின்றபோது என்னுடன் வகுப்புத் தோழர்களாகப் பயின்றவர் T. W. வாசுதேவன்; இவர் ஜனோபகார அச்சகத்தின் மேலாளர். இப்போது (1989) அந்த அச்சகம் இல்லை: மூடப்பட்டுவிட்டது. வேங்கடாசலம் என்ற மற்றொரு நண்பர் 8-வதுடன் படிப்பை முடித்துக் கொண்டு ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியராகப் பணியாற்றி இப்போது ஒய்வு பெற்றுள்ளார். இப்போது ஏதோ ஒரு கடையில் கணக்க ராகப் பணியாற்றுகின்றார். நடேசன், கருப்பண்ணன் என்ற பள்ளித் தோழர்கள் வக்கீல் அலுவலகத்தில் எழுத்தர்களாகப் பணியாற்றி வருகின்றனர். கோபால கிருஷ்ணன் என்பாரும் அவர் தம்பியும் துணிக்கடை வைத்துக் கொண்டிருந்தனர். நான் துறையூரில் பணியாற்றியபோது இரண்டாயிரம் ரூபாய் என் மனைவியிடம் கடனாகப் பெற்றிருந்தார். முக்கால் ரூபாய் வட்டி (9%). ஆண்டுதோறும் வட்டி தவறாது கொடுத்து வந்தார். நான் துறையூரை விட்டுக் காரைக்குடி சென்ற பிறகுதான் தான் வாணிகத்தில் நொடித்துப்