பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடனில் சிக்கிய நண்பரைக் காத்தல் 3互ア தனித்தனியாக ஏலம் போடலாம் என்றும் நான் கூறிய யோசனையை ஒப்புக் கொண்டார் என் நண்பர் கோபாலகிருஷ்ணன். மறுநாள் காலை 9 மணிக்குக் கடையைத் திறந்து உட்கார்த்தோம். முதல் நாள் கூடின கடைவீதி நண்பர்கள் யாவரும் வந்து சேர்ந்தனர். நான், துணி மட்டிலும் வாங்கின விலையில் முக்கால் விலை போட்டால் ரூ. 3000க்கு உள்ளது. இதை ஏலம் போடவில்லை. யாராவது விரும்பினால் ரூ. 3000 = செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்’ ’ என்றேன். ஒரன்பர் துணிகளைத் தனித் தனியாகச் சோதித்தார்; திருப்தியடைந்தார். எடுத்துக் கொள்வதற்கு ஒப்புக் கொண்டு, பணம் கட்டி எடுத்துக் கொண்டார். துணிகளை அடுக்கி வைக்கும் மரச்சட்ட நிலைகள் 1750 = விலை வைத்து ஏலத்திற்கு விடப் இவை ரூ. 2500f=ப் போயின; ஒரன்பர் பணம் . هستند செலுத்தி எடுத்துக் கொண்டார். பின்னர் சுவர்க் கடிகாரம், தேக்காலான ஸ்டுல்கள், அழகான சாய்வு மேசை, தண்டவாளப் பெட்டி முதலியவை ரூ. 1800) - ப் போயின. ரொக்கம் கட்டி சாமான்களை எடுத்துச் சென்றனர்; கோபாலகிருஷ்ணனுக்குக் கடன் தந்தவர்கள் மாலை 4-30க்கு வந்தால் கணக்குத் தீர்க்கப்படும் என அறிவித்தேன். மூன்று நான்கு பேர்கள் புரோ தோட்டுகளுடன் வந்து சேர்ந்தனர். நானும் புரோ நோட்டுகளுடன் சென்றிருந்தேன். மொத்தம் ரூ. 8000/= கடன் (அசல் மட்டும்) இருந்தது. - - பணம் தந்தவர்கள், நண்பர்கள் முதலியவர்கள் பத்துப் பேர் இருந்தனர். இனிப்பு, காரம், காஃபி அருகி. லிருந்த சிற்றுண்டி சாலையிலிருந்து தருவித்தேன். எல்லோரும் உண்டனர். அப்போது நான், கோபால கிருஷ்ணன் குடும்பம் நல்ல குடும்பம். 40 ஆண்டுகளாக நன்றாக வாழ்ந்தவர்கள். கிரகபலன் சரியில்லாமல்