பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姿型忍 நினைவுக்குமிழிகள்-3 நொடித்து விட்டார். இப்போது ரூ. 8300} = தேறி புள்ளது. நாம் எல்லோரும் சேர்ந்து ரூ. 3300 - ஐ. அவருக்கு வழங்குவோம்; வெறுங்கையாக அனுப்புவது சரி இல்லை. உங்கள் கருத்தென்ன?’ என்று கேட்டேன். மனமிரங்கி தலைமையாசிரியர் (நான்) சொற்படியே செய்வோம்' என்று அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டனர். வட்டியைத் தள்ளி விட்டால் அசல் மட்டிலும் ரூ 8000} = வருகிறது. இதை நாம் பிரித்துக் கொண்டால் 0 = 10 = 0 வீதம் வருகிறது. அப்படிச் செய்து கொள்ளலமா?’ என்று கேட்டேன். அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஒவ்வொருவரும் "இந்தப் புரோ நோட்டின் அசல் வட்டி பாக்கியின்றிச் செல்லாகி விட்டது” என்று எழுதிக் கையெழுத்திட்டுத் தருமாறு: வேண்ட அவர்களும் அவ்வாறு செய்தனர். புரோநோட்டு களை வாங்கி நண்பரிடம் தந்து அவரவர்கட்கு உரிய தொகையை அவரவர்களிடம் தந்து விட்டேன். இந்த ஏற்பாட்டினால் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஒருவர் நம் தலைமையாசிரியர் மிக நல்லவர். பழைய நட்டை மறந்து விடாமல் காரைக்குடியிலிருந்து வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஒரு நல்ல காரியத்தைச் செய்தார். அவர் நன்றாக இருக்க வேண்டும்' என்று வாழ்த்தினார். எல்லோரும் ஒரு குரலாக அதை ஆமோதித்தனர். நண்பர்களே, உங்கள் வாழ்த்தின் பலத்தால் நான் தலைமையாசிரியர் பதவியிலிருந்து விலகி காரைக்குடிக் கல்லூரியில் பேராசிரியர் பதவியில் பணி யாற்றுகின்றேன்' என்று நான் கூற அனைவருமே மசிழ்ந் தனர். உங்கள் நல்லெண்ணத்திற்கு இறைவன் மேலும் மேலும் நல்ல பதவிகளைத் தருவான்’ என்று கூறி விடை பெற்றனர். நண்பர் கோபாலகிருஷ்ணன் திருச்சியில் ஒரு வேலை வில் அமர்வதாகவும், தம் தம்பி திண்டுக்கல்லில் ஒரு