பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 - நினைவுக்குமிழிகள்.3 னேன். என் மாமனார் வீட்டுச் சொத்து-நஞ்சை நிலங் கள்-அந்த ஊரில்தான் இருந்தது. என் மைத்துனர் அதைப் பார்க்க வந்திருந்தார். இராமசாமி, நீ உன் அன்னையாரை ஒப்புக்குக் கூப்பிட்டாலும் உன்னோடு வரத் தயாராக உள்ளார்' என்று கிருஷ்ணசாமி ரெட்டி யார் சொல்ல என் மைத்துனரும் அங்ங்னமே அழைக்க என் மாமியாரும் மகனுடன் செல்ல ஒப்புக்கொண்டு பொட்டணம் சென்று விட்டார். 1944 முதல் 1954 முடிய நீதிமன்ற ஆணைப்படி இவருக்குக் கணவனும் மகனுமாக ரூ360|க (ஆண்டொன்றுக்கு) ஜீவனாம்சம் தந்து கொண்டு வந்தனர்; இஃது இனி தரவேண்டியதில்லை என்று கருதித்தான் அன்னையாரைக் கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது என் கருத்து. அன்பும் பாசமும் திறைந்த என் மைத்துனரின் துாய்மையான உள்ளம் அவரது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு இரக்கம் என்ற ஒன்று இல்லாது அரக்க மனமாக மாறி விட்டதை அப்பக்கத்துப் பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். - மாமனார் மறைந்த செய்தி எங்களை எட்டியதும் கருமாதிக்குப் போவதாகத் திட்டம் இட்டோம். என் அன்னையார் இப்போது காரைக்குடியிலிருந்தமையால் இரண்டாம் வகுப்பு படிக்கும் இராமலிங்கத்தை வீட்டில் விட்டு விட்டு நான், என் மனைவி, மூன்று வயது கூட நிரம்பப் பெறாத என் இளைய மகன் இராமகிருஷ்ணன் இவர்களுடன் கருமாதிக்கு முதல் நாள் இரவு நாமக்கல் வந்து சேர்ந்தோம். எட்டு கெஜம் மல் சேலை ஒன்று (வெண்மை நிறம்) எடுத்துக் கொண்டு வந்திருந்தோம். நாமக்கல்லில் பேட்டைப் பகுதியில் குடியிருந்த பாபு ரெட்டியார் (இப்போது அவர் பல பேருந்துகளின் உரிமை யாளர்) இல்லத்தில் தங்கியிருந்தோம். அதிகாலையில், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குழந்தைக்குப் பாலூட்டிக் குதிரை வண்டி ஒன்று அமர்த்திக் கொண்டு