பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மாமனார் பரமபதித்தல் 22 i (திரும்புவதற்கும் பேசிக் கொண்டு) புறப்பட்டோம். காலை எட்டு மணிக்குப் பொட்டணம் வந்து சேர்ந்தோம்; எங்களைப் பார்த்தவுடன் என மாமியார் ஒரு குரல் அழுதார்கள்: பேரனைத் தூக்கி உச்சி முகர்ந்தார்கள். 9-மணி ஆகி விட்டது. குழந்தைக்குப் பசி. இப்போது பகம்பால் வந்தது. என் மைத்துனரின் மகனுக்கும் (அவனுக்கும் மூன்று வயதுதான்) என் மகனுக்கும் நானே பால் ஊட்டினேன். 11-மணிக்குச் சடங்குகள் தொடங் இன; நான் மாமியாருக்கு முதலில் கோடிச் சேலை கொடுத் தேன். தாலி நீக்கப்பெற்றதும் பொன் சரடுடன் கூடிய தாலி, தங்க வளையல்கள் ஆறு (எல்லாம் 15 சவரன் இருக்கும்) இவற்றைத் தன் மகளிடம் தந்து விட்டார்கள்: மகளுக்கும் போவதுதான் சரி என்று அருகிலிருந்தவர்களும் ஆமோதித்தனர். மைத்துனர் வீட்டில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குளியலுக்கும் உணவிற்கும் நாமக்கல் வந்து விடலாம் என்று புறப்பட ஆயத்தமா னோம். சில பெரியோர்கள் தடுத்து நிறுத்தினர். என் மைத்துனரும் உண்டபின் போகலாம் என்று எங்களைக் கேட்டுக் கொண்டார். அதனால் தங்கி விட்டோம். உணவிற்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்குக் கிளம்பி நாமக்கல் வந்தோம் வந்த குதிரை வண்டியிலேயே, அங்கிருந்து எருமைப்பட்டி வந்தோம். என் மைத்துனரின் முதல் மனைவியின் சிறிய தாயார் மகளின் திருமணம் கூடியதால் மேலும் நான்கு நாட்கள் தங்க வேண்டியதா யிற்று. குழந்தை இராமகிருஷ்ணன் முடி இறக்கிய தலை யுடன் இருந்தான்; முடியும் நன்கு வளர்ந்து விட்டது. அதனால் எருமைப்பட்டியிலேயே கிராப்' செய்வித்தேன். எனக்கும் உடல்நிலை சரி இல்லை. தொடை எல்லாம் சிறு சிறு சூட்டுக் கொப்புளங்கள். மிகவும் சங்கடத்துடன்தான் தங்கி இருந்தேன். என்ன செய்வது? தொலைவில் அலுவல் பணியில் அமர்ந்திருப்பவரின் மனநிலைவேறு: சிற்றுாரில் சுக