பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 நினைவுக் குமிழிகள்-3 சீவனம் செய்துகொண்டிருக்கும்மக்களின் மனநிலை வேறு முன்னவரின் மனநிலையையும், பொறுப்புகளையும் பின்ன வர்களால் புரிந்து கொள்ள முடியாது. எருமைப்பட்டிக்கு வந்ததே பிசகு என்பதை உணரலானேன். என் அன்னை யாருக்கும் கடிதம் எழுதினேன் நான்கு நாள் தாமதித்து வருவதாக; முதல்வருக்கும் விடுப்பை நான்கு நாள் நீட்டிக் கும்படிக் கடிதம் எழுதினேன். ஊரக்கரை என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. ஆறு ஏழு மைல் மாட்டு வண்டியில் செல்ல வேண்டும். திருமணம் முடிந்ததும் விருந்துண்டு எருமைப்பட்டி திரும்பி னோம்-அதே வண்டியில், மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நாமக்கல் வந்தோம். அங்கிருந்து திருச்சிக்குப் பேருந்தில் வந்தோம். பகல் 1-30க்கு புறப் படும் இருப்பூர்தி ஏறி மாலை 5-மணிக்கு வீடு வந்து சேர்ந் தோம். குமிழி-134 27. ஓர் ஏழைக்கு உதவியது எம்பெருமான் என்னை ஏழைப் பக்கமே வைத் திருக்கின்றான். எனக்கு ஏழைக்கு உதவும் பண்பைத் தந்துள்ளான். யார்வைணவர்?’ என்ற வினாவுக்கு விடை தருகின்றார் பராசர பட்டர். துன்பத்தால் வருந்துகின்ற ஒருவரைக் காணும்போது எவர் ஒருவர் உண்மையாக "ஐயோ, பாவம்' என்று இரக்கம் கொள்ளுகின்றாரோ அவரே உண்மையான வைணவர் என்று கூறியுள்ளதை நம்பிள்ளை ஈட்டில், கண்டேன். கிட்டத்தட்ட என். இயல்பு அதற்கு ஒத்துவருவதால் அந்த இயல்பை