பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஏழைக்கு உதவியது 223 என்னிடம் உருவாக்கின. அந்த எம்பெருமானைப் போற்றி மகிழ்கின்றேன். ஆறுமுகம் பிள்ளையின் மைத்துனன் கனகாதன் என்பவனுக்கு மூன்றாண்டு (மேல் படிவங்கள்) சம்பளம் கட்டி உதவினேன். அவன் 1953இல் பள்ளியிறுதித் தேர்வில் தேறி வேலை இல்லாது இருந்தான். எங்கும் வேலை கிடைக்கவில்லை. இச்சமயம் பயிற்சிக் கல்லூரி அறிவியல் துறையில் ஆய்வகத்தில் உதவியாளாக இருந்த பையன் (பள்ளியிறுதித் தேர்வில் தேறியவன்; தட்டச்சு பழகிக்கொண்டிருந்தவன்) மின்சார வேதியியல் ஆய்வு நிலையத்தில் வேலை கிடைத்து அங்குப் போய்ச் சேர்ந்து விட்டான். பயிற்சிக் கல்லூரியில் மாதச் சம்பளம் ரூ. 28). ஆய்வு நிலையத்தில் மாதச் சம்பளம் ரூ. 100-க்கு மேல்; பையனும் சுறுசுறுப்பாகப் பணியாற்றுபவன். அவனது பணியை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த இடத்திற்குத் திரை மறைவில் ஒரு பையனுக்கு முயற்சி நடை பெற்றது. இதற்கு முயன்ற பையன் பிராமணச் சிறுவன். எட்டாவது வரைதான் படித்திருந்தான், இருப்பூர்தி நிலையத்தருகிலுள்ள ஒரு சிறிய சிற்றுண்டி விடுதியில் உதவியாளாக இருந்து கொண்டிருந்தான். அச்சிறுவனுடைய தந்தையோ, தாய் மாமனோ இங்கு வேலை காலியிருப்பதை அறிந்து விண்ணப்பம் அனுப்பச் செய்து முதல்வர் பேராசிரியர் எஸ். சீனிவாசனையும் நேரில் பார்த்து வேண்டிக் கொண்டதாகச் செய்தி தெரிந்தது. - முதல்வர் இந்த விண்ணப்பத்தை அறிவியல் பேராசிரியர் அய்யாதுரை ஜேசுதாசனுக்கு அனுப்பி வைத்து, அவரையும் நேரில் கூப்பிட்டு, மிஸ்டர் ஜேசுதாசன், மனு உங்கட்கு அனுப்பி வைத்துள்ளேன். * பள்ளியிறுதித் தேர்வில் தேறினவர்கள் இந்த வேலைக்குத் தேவை இல்லை; அப்படிப் போட்டால் வேறு