பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஏழைக்கு உதவியது 22 7 செய்தேன். பையனைப் பார்த்தவுடன் திரு ஜேசுதாசனைக் கூப்பிட்டனுப்பி விண்ணப்பத்தை அவரிடம் தந்து பரிந்துரைக்கச் செய்து அன்று மாலையே ஆணையையும் பிறப்பித்தார். கனநாதனும் மறுநாள் காலையே வந்து பணியை ஒப்புக் கொண்டு விட்டான். ஆறுமுகத்தையும் கணநாதனையும் என் அறைக்கு வரச் செய்து, கணநாதா, ரூ. 201= ஐ உன் மாமனிடம் கொடு. வருகிற மாதம் முதல் தேதியன்று தட்டச்சு நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறு. காலை 7-8 மணிக்குப் பயிற்சிக்குப் போவதாக ஏற்பாடு செய்து கொள்க. இதுதான் உனக்குச் சரியான நேரம். ரூ. 8 = ஐ செலவுக்கு வைத்துக் கொள்க' என்று அறிவுரை கூறிப் பையனை அனுப்பி விட்டேன். தனியே ஆறுமுகத்திடம், * நாராயணன் பல இடங்கட்குத் தனியாக முயல்கின்றான். இருப்பூர்தித் துறைக்கு விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றான். எப்படியும் அவனுக்குக் கிடைத்து விடும். கணநாதன் தட்டச்சுத் தேர்வில் வெற்றி பெற்றுத் தன்னை தகுதியாக்கிக் கொண்டால் நாராயணன் இடத் திற்குத் தாவலாம்' என்று சொல்லி விடுத்தேன், ஒரே ஆண்டில் இரண்டு தட்டச்சுத் தேர்வுகளிலும் வெற்றி பெற்றான் கணநாதன், இச்சமயத்தில் நாராயண னுக்கும் இருப்பூர்தித்துறையில் வேலை கிடைத்துவிட்டது. விடுதலை கோரி விண்ணப்பமும் வைத்தான். அந்த இடத்தைத் தனக்கு வழங்குமாறு விண்ணப்பம் அனுப்பு மாறு கணநாதனைப் பணித்தேன். அவனும் அவ்வாறே செய்தான். இப்போது முதல்வராகத் திரு ப.துரைக்கண்ணு முதலியார் வந்து சேர்ந்துவிட்டார். இப்போதுள்ள வேலை சற்றுப் பெரியது. மாதச் சம்பளம் ரூ. 100| = ஐத் தாண்டியிருக்கும். இதற்குப் பலர் முயல்வார்கள். சா. க., அறக்கட்டளை மேலாளர், வேறு செட்டியார்கள் -யாரையாவது பரிந்துரைக்கக் கூடும். இதனால்