பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22& நினைவுக்குமிழிகள்-3 முயற்சியை வேறு திசையில் திருப்பி விடவேண்டும் என்று. என் மனம் எண்ணியது. ஆறுமுகத்திடம் இவற்றை யெல்லாம் கூறி விளக்கினேன். அவரும் இதை ஆமோதித். தார். காரைக்குடியில் ஏ.வி.எம் மெய்யப்பச் செட்டியாரின் மகன் ஆச்சிக்கு பிறந்தவர்) கல்லுக்கட்டி வடகரையில் ஒரு கடை வைத்திருந்தார். இவரிடம் கணநாதன் நெருங்கிப் பழகி வருவதை நான் அறிந்திருந்தேன். செட்டியார் ஏவும் பணிகளை உவப்புடனும் விருப்புடனும் செய்து வந்தான் கனநாதன். இவர் கண்டனூரில் பெண் எடுத்துத் திருமணம் செய்து கொண்டவர். அதாவது, வள்ளல் அழகப்பர் தன் மகள் உமையாளை கண்டனூரில் தன் சகோதரி மகன் இராமநாதனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த இராமநாதனின் சகோதரியைத்தான் ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டி யாரின் மகன் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகவே, இரண்டு குடும்பத்திற்கும் நெருக்கமான உறவு இருந்தது. எனவே, மெய்யப்பரின் மகன் தன் மைத்துனர் இராமநாதனுக்குத் தொலைபேசி மூலம் செய்தி அனுப்பி னால், அவர் தன் மனைவி உமையாள் மூலம் (வள்ளலின் ஒரே மகள்) இதை நிறைவேற்றுவார் என்று நினைத்தேன். ஆறுமுகத்திடம் இதை விளக்கினேன். அவர் என் யோசனையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனார். கல்லூரிக்குத் தந்த விண்ணப்பத்தின் நகல் ஒன்றை உமையாள் இராமநாதனுக்கு அனுப்பச் செய்து மற்றொன்றை ஏ.வி எம். மகனிடமும் சேர்க்கச் செய்தேன். கனநாதனுக்கு நல்லூழ் இருந்ததனால், உமையாள் இராமநாதன் முதல்வருக்கும் அறக்கட்டளை மேலாளர் T. W. S. மணிக்கும் போன் செய்யவே, காரியம் வெற்றியாயிற்று. என்னைக் கருவியாகக் கொண்டு இறைவன் நடத்திய நாடகம் பயனை விளை