உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-134 28. தினமணித் தொடர்பு 8ു மதாபிமான சங்கத்துடன் அதிகமான தொடர்பு எனக்கிருந்தது. விழாக்கள் ஏற்பாடுகளில் கூட அதிகமாக ஈடுபட்டிருந்தேன். ஒரு சமயம் என்னை அண்ணாமலை நகருக்கு அனுப்பி டாக்டர் ஏ. சி. செட்டி யாரை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்பது ராய.சொ.வின் ஆணை, அங்ங்ணமே சென்று அவரை விழாவில் கலந்து கொள்வதற்கு ஒப்புக் கொள்ளுமாறு செய்தேன்; ஒரு வழி பயணப்படியும் தந்து திரும்பினேன். ஒரு சமயம் ஏதோ ஒரு விழாவிற்குத் தினமணி உதவி ஆசிரியர் (சுடர் பொறுப்பிலிருந்தவர்)திரு. வேங்கடாச்சாரி விழாவிற்கு வந்திருந்தார். ராய. சொ. என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவரும் என்னைக் கலிங்கத்துப்பரணி பற்றி ஒர் ஆறு கட்டுரைகள் சுடருக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டார். நானும் தென்தமிழ் தெய்வப்பரணி, கடைதிறப்பு, பேய்கள் உலகம், வரலாற்றுக் கருவூலம், கற்பனை ஊற்று, சுவைகளின் களஞ்சியம் என்ற ஆறு தலைப்புக்களில் எழுதித் தந்தேன்; அவை வெளி வந்தன. இவற்றால் நான் தமிழகமெங்கும் அறிமுகமானேன். இதன்பிறகு தினமணிக் கதிருக்கு எழுதுமாறு அழைப்பு வந்தது. பத்துக் கட்டுரை கட்குமேல் எழுதியதாக நினைவு. இவற்றால் என் அறிமுகம் மேலும் அதிகமாயிற்று. இதே காலத்தில் மதுரையிலிருந்து வெளிவந்த 'தமிழ் நாடு என்ற நாளேட்டின் ஞாயிறு மலருக்கு'ச் சங்க இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து