தினமணித் தொடர்பு 23.3 வைக்குமாறு அதன் துணை ஆசிரியர் எம்.எஸ்.சண்முகம் எழுதியிருந்தார். சுமார் முப்பது கட்டுரைகட்கு மேல் எழுதியதாக நினைவு. இக்கட்டுரைகளால் நான் தமிழக மெங்கும் நாடறிந்த பார்ப்பானானேன்' ! தினமணியில் வெளியான ஆறு கட்டுரைகளையும் மேலும் எழுதிச் சேர்த்த கருணாகரத் தொண்டைமான் குலோத்துங்கன், சயங் கொண்டார் என்ன மூன்று கட்டுரைகளையும் சேர்த்து காரைக்குடி செல்விப் பதிப்பகம் கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டது (மார்ச்சு 57). இது எனது இரண்டாவது வெளியீடு. - இந்த நூலுக்கு ராய. சொ. அவர்கள் ஒர் அறிமுகம் தந்து வாழ்த்தினார்கள். அறிமுகத்தில், கலிங்கத்துப்பாணி’ என்ற அரிய நூலுக்குத் திறவு கோலாக அமைந்திருப்பது கவிங்கத்துப்பரணி ஆராய்ச்சி என்னும் இந்நூல். இத் திறனாய்வு நூலை எழுதியவர் என் அரிய நண்பரும் நன்கு கற்ற வரும் வள்ளல் அழகப்பனாரின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவருமாகிய அன்பர் 15. சுப்புரெட்டியார் அவர்கள். அன்னார் கலிங்கத்துப் பரணியை நன்கு ஆராய்ந்து ஆங்காங்குள்ள நயங் களையெல்லாம் இந்நூலில் அழகுபட எடுத்துக் காட்டியிருக்கின்றார். கலிங்கத்துப் பரணி கற்பாருக்கு இந்நூல் பேருதவி செய்ய வல்லது.' 'கடை திறப்பின் உட்பொருள் என்ற பகுதியில் திரு. ரெட்டியார் காட்டியிருக்கும் கருத்தே கொள்ளத் தக்கது. தமிழ் மக்கள் இந் நூலையும் இதற்கு மூல மாகிய கலிங்கத்துப் பரணி நூலின் சிறந்த பாடல் களையும் படித்து உணர்ந்து இன்புற்று உயரத் தமிழ்த் தாய் அருள்வாளாக. வணக்கம். ! - என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/257
தோற்றம்