பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவுக் குமிழிகள்-3 இந்த நூலுக்கு காரைக்குடி இலக்கியச் சுவைஞர் வி. ஆர். எம். செட்டியார் அவர்கள் Appreciation என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு பாராட்டுரை எழுதிச் சிறப் பித்துள்ளார். காரைக்குடி நண்பர்களில் இவரும் ஒரு. முக்கியமானவர். டி. கே. சிக்கும் அவருடைய சீடர் களுக்கும் நன்கு அறிமுகமாகி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இந்தச் சிறிய நூலை கம்பனடிப் பொடி சா. க. அவர் கட்கு, தீந்தமிழ் அன்னைக்கு இனிய நற் புதல்வன்; செம்மையில் பிறழ்ந்திடா உளத்தன்; காந்திஎம் பெருமான் நெறிவழி நிற்போன் கல்சொலும் கதையுணர் அறிஞன்; சாந்தமார் முப்பால் வாசகம் சுவைப்போன்; தண்டமிழ்க் கம்பனுக்கு அடியான்; மாந்தருள் சிறந்தோன் கணேசனாம் எங்கள் வள்ளலுக் குரியதிந் நூலே. என்று அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். அன்றியும் நூல் முகத்திலும் திரு. கணேசன் அவர்கள் புலவர்கட்குப் புலவர்; தலைவர்கட்குத் தலைவர்; தொண்டர்கட்குத் தொண்டர். அவர் அலாதி மனிதர். அனைத்தையும் அப்பர் பெருமானுக்கே அர்ப்பணம் செய்து வாழ்வைத். து.ாய்மையாக்கிக் கொண்டு வாழ்ந்த-பெரிய புராணத் தொண்டர்-அப்பூதியடிகளைப் போலவே, அனைத்தை யும் கம்பனுக்கென்றே உரிமையாக்கித் தம் வாழ்வைத். துரய்மையாக்கிக்கொண்டு வாழ்பவர் திரு. கணேசன். கம்பன் காவியத்தைத் துணை கொண்டு பாமர மக்கள் மீதும் இலக்கியவானத்தைக் கவியச் செய்து கொண்டு. வருபவர்' என்று பதிவு செய்துள்ளேன்.