பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நினைவுக் குமிழிகள்-3 தில் இருந்தன. அந்தத் தொகுதியொன்றில் செய்திகள்", என்ற தலைப்பில் அடிகளாருக்குத் தமிழ்க்கடல்’ என்ற விருது வழங்கப்பட்ட செய்தியை எடுத்துக் காட்டினேன்; வியந்து போனார் ராய. சொ. உடனே அவர், நீங்கள் ஆய்வுத் துறையில் சிறந்து விளங்குவீர்கள் ஆண்டவன் அதற்குத் துணை புரிவானாக’’ என்று வாழ்த்தினார். 1960-இல் திருப்பதியில் பணியேற்றதற்கும் இவர் வாக்கு ஒரளவு பலித்திருக்க வேண்டும் என்று நம்புகின்றேன். (2) ராய. சொ. வேறு சில நண்பர்களுடன் சிவ தீக்கை பெற்றுச் சிவபூசை எடுத்துக் கொண்டார். பழநி ஈசான சிவாச்சாரியார் செய்து வைத்தார். உயிரனைய நன்னெறியினை மேற்கொண்டு ஒழுகி உய்தற்குக் கை கொள்ள வேண்டிய ஒழுங்குகளுள் தலையாயது சிவ தீக்கை. தீக்கை என்னும் சொல் தீ +கை என்னும் இருசொற்களின் முதனிலைகள் சேர்ந்து தோன்றும் ஒரு சொல். தீ என்பது தீயச் செய்தல். கை, செலுத்துதல். எனவே மலம், மாயை, கன்மங்களின் ஆற்றலைப் பயன் பெறாத வண்ணம் தீய்த்து அன்பர் மனத்தை அருள் நினைவால் செந்நெறிக் கண் செலுத்துவது தீக்கையாகும். ஆளுடைய பிள்ளையார், தம் திருமணத்தில் வந்தாரனைவர்க்கும் திருமுறை வழிச் சிவதீக்கை செய்தருளினதும் அதனால் அவர்கள் சிவனடிகளாகும் சிறப்பு எய்தியதும் காதலாகி' (3.49) என்ற சம்பந்தரின் தேவாரத் திருப்பதிகத்தால் , உணரப் பெறுபவை. இத்தீக்கை காண்டல், கருதல், தீண்டல், கட்டுரைத் தல் என நான்கு வகைப்படும். காண்டல்-(நோக்கம்) .பார்வை; கருதல்-பாவன்ை: தீண்டல்-தொடுதல். கட்டுரைத்தல்-உபதேசம். நம்பியாரூரருக்குக் காண்டலும், கருதலும், தீண்டலும் முறையே தடுத்தாட்கொண்டது முதல் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. இவை முறையே .திருவெண்ணெய் நல்லூர், திருத்துறையூர், திருவதிகை விரட்டானப் புறம்பணைச் சித்தவடமடம் என்ற திருப்பதி