பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多岛& நினைவுக்குமிழிகள்-3 என்ற பாசுரத்தில் பார்த்தனின் சிவவேடம் காட்டப் பெறுகின்றது. தவநிலையில் இருக்கும் அருச்சுனன் என் மனத்தின்கண் நிற்கின்றான். பலமுறை ராய. சொ. சிவபூசைசெய்து வந்ததை நேரில் பார்த்து வியந்ததுண்டு. ஒருமுறை தேவகோட்டை சேவுகன் செட்டியார் என் பவர் இ. ம. சங்கத்தில் இரண்டு மூன்று நாள் தங்கியிருந் தார். இவர் பெரிய செல்வர். ராய. சொ. சிவதீக்கை பெறுவதற்கு முன் வந்திருந்ததாக நினைவு. அவர் கையில் வலம்புரிச் சங்கு ஒன்றிருந்தது. அதன் விலை 7500/- என் றார். கோயில் மாதிரி அமைத்து அதில் இலிங்கத்தை எழுந்தருளச் செய்தார். அதற்குத் திரு. முழுக்கு முதலி யவை வலம்புரிச் சங்கு கொண்டு நடைபெற்றது. பூசை தொடங்கும் முன் ஒரு சிறு பாத்திரத்தில் அரிசி, வெல்லம் முதலியவை அளவாகப் போட்டுச் சாராய விளக்கு ஏற்றி வைத்தார். பூசை காரியங்கள் சுமார் 18 மணி நேரம் நடை பெறும். அதற்குள் திருவமுது தயாராகிவிடும்; அதை வைத்து நைவேத்தியம் செய்தார். சேவுகன் செட்டியார் ஈகைக் குணமுடைய வள்ளல். அவர் இப்போது சிவப்பேறு அடைந்துவிட்டார். அதன் பிறகு ராய. சொ. சிவபூசை சுருக்கமாகச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இவர் பூசையில் திருமுறைப்பாடல்கள் அருச்சனையாகப் பயன் படுவதைப் பார்த்து மகிழ்ந்ததுண்டு. (3) ஒரு சமயம் ராய. சொ. வை மாரடைப்பு நோய் இலேசாகத்தாக்கியது;தப்பித்துக்கொண்டார்.இவருடைய நெருங்கிய நண்பர் டாக்டர் வர்க்கீஸ் என்ற பல்மருத்துவர் மிக்க கவலைப்பட்டார். அவர் ஒரு நாள் ராய. சொ. விடம் வந்து சொன்னது: ராய. சொ., உங்கள் பற்களை யெல்லாம் (சில ஆட்டங் கண்டவை; ஒரு சில விழுந்து விட்டன) அகற்றி விடவேண்டும். பல் சீழ் நோய்க்காக {Pyorrhoea) ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். நான் என் சேலவில் அழகாகப் பல் கட்டித் தந்துவிடுகின்றேன்.