பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் ராய.சொ. 3.35 அதன் பிறகு நான் சொல்லும் உணவை மட்டிலும்தான் சாப்பிடவேண்டும். இப்படிப் பத்தியம் அதுட்டித்தால் 75 அகவைக்கு மேலும் வாழ்வீர்கள்: இதய நோய்க்குரிய மாத்திரைகளைக் காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக எடுத்துக் கொள்ளலாம்’ என்று. இவர் இப்படிச் சொன்னது அவரது மணி விழா முடிந்து ஒன்றிரண்டு மாதங்களில். ராய. சொ. கண்டபடி தின்பவரல்லர். பல்வேறு உணவு வகைகளையும் தின் பண்டங்களையும் சுவைத்துச் சுவைத்து சாப்பிடுவார். தேன் குழலை ஜாங்கிரி பதத்தில் எடுத்து அதைச் சாப்பிடு வதில் அதிக ஆசை. இப்பழக்கத்தையெல்லாம் அவரோடு நெருங்கிப் பழகிய டாக்டர் வர்க்கீஸ் நன்கு அறிந்துவராத லால் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். இவர் செய்த செயல் எனக்கு, மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு." என்ற திருக்குறளை நினைவு கூரச் செய்கின்றது. எண்ணெயாலான பொருள்களே கூடாது என்று 144 சட்டம் போட்டார். இச்சட்டத்தை நன்கு பின்பற்றிய தால் இதய நோய் தாக்குதலுக்குப் பிறகும் 15 ஆண்டு களுக்கு மேல் வாழ்ந்தார். ராய். சொ. இதன் பிறகுதான் இவர் வெளியூர்களில் அதிகமான இலக்கியக் கூட்டங்களி லும்கலந்து கொண்டு பேசினார். எப்பொழுதும் உற்சாகத் துடன் காணப்பட்டார். 1960-ஆகஸ்டில் நான் திருப் பதிக்குப் போய் விட்டாலும்; 1986-வரை மே முடிய என் குடும்பம் காரைக்குடியில் இருந்தபடியால், விடுமுறைக் காலங்களில் காரைக்குடியில்தான் இருப்பேன்; இவருடன் கலந்து பழகுவேன். 1966-க்குப் பிறகும் கொடுக்கல் வாங்கவில் ஏற்பட்ட வழக்குகள் பொருட்டுக் காரைக்குடி 2. குறள்-945 (மருந்து)