பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நினைவுக் குமிழிகள்-; இதில் காந்தியடிகள் மீது ராய. சொ. கொண்ட பக்தியும், தமிழை ஆராஅமுதம் போல் பருகும் தமிழ்ப் பற்றும், காதல் இலக்கியத் தெளிவும் புலனாகின்றன. இத்தகைய பெருமகனை நான் திருப்பதிக்கு வர வழைக்க எண்ணி இருந்தேன். கம்யராமாயணக் கருத்தரங்கிற்கு சா. க. மட்டிலும்தான் வந்தார்; ராய. சொ. அப்போது சிவப்பேறு அடைந்து விட்டார். வில்லி பாரத விளக்கத்தில் சில நிகழ்ச்சிகளை அடுத்து வரும் சில: குமிழிகளில் வெளிப்படுத்துவேன். குமிழி-135 30. கன்னன் கண்ட கண்ணன் இந்த மதாபிமான சங்கத்தில் ராய. சொ. வில் ஜி. பாரதத்தை உருக்கமாகச் சொல்லி வந்தபோது பசுமை யாக என் மனத்தில் நிற்கும் ஒரு காட்சியை இக்குமிழியில் வெளியிடுகின்றேன். 17-ஆம் நாள் நடை பெற்ற போரில் "ஈகையால் எதிர் இலாக் கன்னன் அருச்சுனன் கணை யால் மடியப் போகின்றான்.உடல் முழுதும் குருதி பொங்கி வழியும் நிலை மகுடமும் கவச குண்டலங்களும் உருக் குலைந்த நிலையிலும் விற்குனிப்பும் கடுங்கனை தொடுத் திடும் கணக்கும் அவன் கை மறந்தது இல்லை. ஆதவன் அத்த வெற்பில் சாய்தற்கு இன்னும் இரண்டு விற்கிடை தாரம்தான் உள்ளது. போரை நிறுத்துமாறு பார்த் தனுக்குக்கூறி, பார்த்தசாரதி மெய்த்தவ வேதியன்போல் உருக்கொண்டு வெயிலவன் புதல்வனை அடைகின்றான். * ஐயா. இத்தரணியில் தளர்ந்தவர்க்கு வேண்டுவன