பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன் கண்ட கண்ணன் 245 தருகின்றாய் எனக் கேள்விப் பட்டேன். மேருவில் தவம் புரியும் அடியேன் வறுமையால் பெருந்துயர் உறு கின்றேன். இயைந்தது ஒன்றை இக்கணத்து அளிப்பாய்’’ என்று கன்னனை வேண்டுகின்றான் முத்தருக்கெல்லாம் மூலமாய் நிற்கும் முகுந்தன். அருக்கன் குமரன் செவியில் அந்தணன் வேண்டுகோள் அமுதுபோல் இனிக்கின்றது. விசயனின் வெங்கணை யால் மெய்தளர்ந்து தேர் மீது விழும் நிலையில், நன்று, தரத்தகு பொருள் நீ நவில்க!' என்று கேட்க, மறைய வனும் ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்று வேண்டுகின்றான். சூதன்மா மகனும். ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ? புறத்ததோ? அறியேன்: பாவியேன் வேண்டும் பொருள்ளலாம் நயக்கும் பக்குவம் தன்னில்வந் திலையால்; ஒய்விலாது யான்செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்; கொள்க நீ! உனக்குப் பூவில்வாழ் அயனும் நிகர்அலன் என்றால் புண் ணியன் இதனினும் பெரிதோ?* என மொழித்து அந்தணனை இருகரத்தால் இறைஞ்சு கின்றான். இக்காட்சியை திருநாவுக்கரசு செட்டியார் இசையுடன் கொண்டு நிறுத்தும்போது கேட்போர் கண்கள் குளமாகின்றன. ராய. சொ. கண்கலங்கிய நிலையில் பாடலை விளக்கும்போது கேட்போர் கண் களினின்றும் நீர்வழியத் தொடங்குகின்றது. - கண்ணனோ சாதாரணக் கண்ணன் அல்லன்; மாயக் கண்ணன். முன்னம் ஒர் அவுணன் செங்கை நீர் ஏற்று மூவுலகமும் உடன் கவர்ந்தவன் . உடனே இறைஞ்சலர்க்கு 1. 17ம் போர்-248