பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடி வாழ்வில் குமிழி - 08 1. கல்லூரியில் பணி ஏற்றல் சரி. கணேசன் இல்லம் எனக்கு ஒராண்டுக்குமுன்னரே நன்கு அறிமுகமான இடம், ஆகவே, யாருடைய துணையு மின்றிக் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நீராட லையும் நிறைவு செய்து கொண்டு அன்றைய பணிக்குத் தயாரானேன். காரைக்குடியில் கல்லுக்கட்டி என்ற இடம் தான் ஊருக்கு இதயம் போன்றது. ஒரு சிறிய தெப்பக் குளம். அதைச் சுற்றி நான்கு திசையிலும் வீதிகள், வீதி களின் இருமருங்கும் கடைகள், உணவுவிடுதிகள், காய்கறிக் சந்தைகள் எல்லாம் இருந்தன. தென்கிழக்கு மூலையில் கொப்புடையம்மன் கோயிலும், மேலை வீதியில் கிருட்டினன் ஆலையமும் உள்ளன. முதல் வேலையாக கொப்புடைய நாயகியின் திருக்கோயிலை அடைந்து அங்குள்ள கணேசப் பெருமானை வழிபட்டேன். செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் சீர்பெற் றிடநீ அருள்செய்வாய் வையந் தனையும் வெளியினையும் வானத் தையுமுன் படைத்தவனே! ஐயா! நான்முகப் பிர்மா! யானை முகனே வாணிதனைக் கையா லனைத்துக் காப்பவனே! கமலா சனத்துக் கற்பகமே!’ 1. பா. க. தோ. பா. வி. நா. மா-3