பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2豪6 நினைவுக் குமிழிகள்-3 எழிலி (மேகம்) ஏறு அனையான் கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி’ கைப்புனலுடன் தருக!" என வேண்டுகின்றான். தாரை வார்த்துக் கொடுக்கத் தண்ணீர் வேண்டுமே, கன்னன் சுற்றும் முற்றும் நோக்கு கின்றான்: தண்ணிர் இல்லை. பார்த்தன் செலுத்திய அம்பொன்று இதயத்தில் பாய்ந்து நிற்பதைக் காண் கின்றான்; மகிழ்ச்சி பொங்குகின்றது. அந்த அம்பைப் பிடுங்கவே குழாய் நீர் கொட்டுவது போல் குருதி டொங்கி வழிகின்றது. அந்தக் குருதியால் தாரை வார்த்துத் தரு கின்றான்' என்று ராய. சொ. விளக்கும்போது கேட் போர் கண்களிலும் நீர் தாரை தாரையாக வழிந்தோடு கின்றது. தேர்த்தட்டில் மயங்கும் நிலையில் இருக்கும் கன்னனை நோக்கி, வள்ளலே, "நீ வேண்டிய வரங்கள் சொல்லுக ; உனக்குத் தருதும்!’ என்று முனிவன் உரைக்க, ஈத்து வக்கும் இன்பத்தில் திளைக்கும் பகலவன் மைந்தன், அல்லல்வெவ் வினையால் இன்னம்.உற் பவம் உண் டாயினும் ஏழ்எழு பிறப்பும் இல்லை என்று இரப்போர்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள்!” என்று வேண்டுகின்றான். இங்கு மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு என்று மைத்துனன்’’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார் கவிஞர். இதுகாறும் ஒருவருக்கொருவர் பரம விரோத மனப்பான்மையுடன் இருந்த கன்னனும் கண்ணனும் குருதி உறவால் நெருங்குகின்றனர் என்பது இதனால் தெரி 2. 17-ஆம் போர் - 242

  • : . 3. டிெ — 343