பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன் கண்ட கண்ணன் 347 கின்றது. வேதியனும் கன்னனைக் கைத்தலமலரால் மார் புறப் புல்லிக் கண்மலர்க் கருணை நீரால் நீராட்டு கின்றான்; சொல்கின்றார் கவிஞர்: எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி’’ என்ற வரமும் அருள்கின்றான். வேதியனாக வந்த பரந்தாமனும் அடுத்து மூல் உருவைக் காட்டுகின்றான். எப்படி? கடவில் மூழ்கி எழுந்த காளமேகத்தின் நிறத்தையுடைய வடிவுடன் திருவாழி திருச்சங்கு கதை வாள் வில் என்ற பஞ்சாயுதங்களுடன் தோன்றுகின்றான். இதனை வில்லிபுத்துரார், கூற்றுறழ் கராவின் வாயின்நின்று அழைத்த குஞ்சர ராசன்முன் அன்று தோற்றிய படியே தோற்றினான் - முடிவும் தோற்றமும் இலாத பைந் துளவோன்.” என்று காட்டுகின்றார். கசேந்திராழ்வானு'க்கு தந்த காட்சியையே இன்று கன்னனுக்கும் நல்குகின்றான் ஆதி யும் அந்தமும் இலாத துளவ மணி மார்பன். தேவர்களும் தேவலோக வாசிகளும் தேவேந்திரனும், நான்முகனும், முனிவர் பெருமக்களும் இந்தக் காட்சியைக் கண்டுகளிக் கின்றனர்; கனக நாள்மலர் கொண்டு பணிகின்றனர். கன்னனோ போர்முனையில் பார்த்தன் கணையால் உயிர் விடவும், அமல நாரணனைக் காணவும் பேறு பெற்றேன் என்று கூறி உள்ளம் பூரிக்கின்றான். 4. 17-ஆம் போர்-248 5. டிெ – z 44