பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. நினைவுக் குமிழிகள்-3 மேலும் பேசுகின்றான்: 'அருந்தழில் வளர்த்து மாமகங்கள் புரிந்தும், கங்கை முதலிய புனித தீர்த்தலங் களில் நீராடியும், வாயுவை அடக்கிச் செய்யும் யோகத்தில் ஆழ்ந்திருந்தும், தூமலர் தூவிப் பூசை நேர்ந்தும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் இருக்கும் உன்னை என் இதயத்துள்ளே நிலைபெற்றிருப்பதைக் கண்டும் போகங்களை எல்லாம் துறந்து அரிய பெரிய தவங்கள் இயற்றியும் பெறுதற்கரிய பெரும் பயனை நின் திருவரு ளால் அடைய முடிந்தது’ என்கின்றான். அடுத்து, அவன் கண்ட காட்சியையும் கூறுகின்றான். வில்லிபுத்துாரார் வாக்கில் இதனைக் காண்போம். நீலநெடுங் கிரியும்மழை முகிலும் பவ்வ நெடுநீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக் கோலமும்வெங் கதைவாளும் சங்கு நேமி கோதண்டம் எனும்படையும் குழையும் காதும் மாலைநறுந் துழாய்மார்பும் திரண்ட தோளும் மணிக்கழுத்தும் செவ்விதழும் பாரி சாதக் காலைமலர் என மலர்ந்த முகமும் சோதிக் கதிர்முடியும் இம்மையிலே கண்ணுற் றேனே" இந்தப் பாடலை திருநாவுக்கரசு செட்டியார் உருக்கமாகப் பாடியவுடன் கசேந்திராழ்வான், கருடாழ்வான்மீது பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியாருடன் வரும் பரவாசுதேவனைக் கண்ட காட்சியையே அனைவரும் கண்டது போல் தலைக்குமேல் இரு கரங்களையும் கூப்பி வணங்கத் தலைப்பட்டு விடுகின்றனர். ராய சொ. வின் விளக்கம் : திருமாவின் திருமேனி லமலைபோல் காட்சி அளிக்கின்றது; கடல் புகுந்து கருக்கொண்டு மழை பொழியும் காள மேகத்தினை நிகர்த்துக் காணப் பெறுகின்றது; கடல் இ. 17-ஆம் போர் - 247,