பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன் கண்ட கண்ணன் 罗荡药 வாழ்க்கை; முழு நிறைவு பெற்ற வாழ்க்கை!" என்று பெருமித உணர்வுடன் பேசுகின்றான்-என்று கூறி ராய. சொ. விளக்கும்போது கன்னனின் பெருமித உணர்வு வெளிப்படுகின்றது. கண்ணனின் சிறு குறும்பு களையும் நினைக்கச் செய்கின்றது. நின் திரிவிக்கிரமாவதார காலத்திலே நின்திருவடி சத்தியலோகத்தையும் தாண்டிச் சென்றது. அதை தான் முகன் தன் கமண்டல நீரால் கழுவி பூசித்தான். (இந்த நீரே கங்கையாகப் பெருகி தேவலோகத்தில் பாய்ந்தது; சகரபுத்திரர்களின் சாபம் நீங்குவதற்குப் பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவம் இயற்றிப் பூலோகத் திற்குக் கொணர்ந்தான்). இத்தகைய திருவடியை வணங்கும் பேறுகிடைத்தது; இதனால் என் உள்ளமும் தூய்மையாயிற்று. தவிர, திருத்துழாய் மாலை புரளும் நின்திருமார்பையும் திருப்புயத்தையும் தழுவும் பேறும் கிடைத்தது. அர்ச்சுனன் கணையால் உயிர் போகும் நிலையில்"வீழ்ந்த போதும் நின் திருநாமத்தை நாவினால் நவிற்றும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்த உலகில் பிறந்த அனைவரிலும் என்னைத் தவிர இந்தப் பேற்றைகிடைத்தற்கரிய பெரும் பேற்றை- யார் பெற்றார்கள் என்று கூறுகின்றான் கண்ணன்' என்று விளக்கும்போது எல்லோரும் கன்னன் இருந்த காலத்திற்கே சென்று விட்டோம். கதை கேட்ட அனைவருமே குருட்சேத்திரப் போர்க்கணத்தில் இருந்த உணர்வை அடைந்தோம். இந்துமதாபிமான சங்கமண்டபம் குருட்சேத்திர பூமியாக மாறியதையும் உணர முடிந்தது. இப்படி உணரமுடியா தவர்கள் என். டி. இராமாராவ் நடித்த கர்ணன்’ படக்காட்சியையாவது நினைத்து மகிழலாம். இதில் இராமாராவ் கண்ணனாக நடித் திருப்பது அற்புதம்: மகாஅற்புதம்! சிவாஜிகணேசன் கன்னன் கோலத்தில் வந்த காட்சியும் ராமார்ாவ் நடிப்பிற்கு நிகர்ாக நின்று திகழ்கின்றது.