பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-137 31. அழுத அன்னையும் ஐவரின் மனக்கலக்கமும் இந்து மதாபிமான சங்கத்தில் வில்லி பாரத விருந்து தடை பெறும் போது மனம் உருக்கும் இன்னொரு காட்சி மனத்தில் பசுமையாகவே உள்ளது. அஃது இந்தக் குமிழியில் வெளிப்படுகின்றது. இந்தக் காட்சி வில்லி பாரதத்தில் 17-ஆம் போரில் உள்ளதாகும். கண்னனின் "திருமாலின் தரிசனம் பெற்று கன்னன் இன் புற்றிருக்கையில் கன்று கொண்டு விள வெறிந்த கண்ணன் கன்னனிடம் தெரிவித்தவை: எல்லி மைந்தா, கடவுள் நாதனை உன்னிடம் அனுப்பி நின் கவச குண்டலங்களைப் பெறச் செய்தவனும் நான், குந்தி தேவியை அனுப்பி அரவவாளியை ஒருதடவைக்கு மேல் பார்த்தன்மீது செலுத்தாதிருக்க நின்னிடம் வரம் பெறச் செய்தவனும் நான் உன்னுடைய பிறப்பை உனக்கு உணர்வித்தவனும் நான்; தக்கன் மகனான உரகவாளி 'தனஞ்செயனைச் சதியாமல் விரகு செய்வித்தோனும் தான்; இஃதெல்லாம் நின்மீது நான் கொண்ட கருணையின் பொருட்டேயாகும்' என்று தெரிவித்து விட்டு மீண்டும் விசயனுக்குத் தேர்வலவன் ஆகின்றான். இப்படி எல்லாம் அறிவித்த கண்ணனைக் கவிஞர், - எக்கடலும் எக்கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லா மாகி மைக்கண் இளங்கோவியர் துண் துகிலும் - வரிவளையும் மடநெஞ்சும் வாங்கும் மாலே!" 1. வி. பா: 17ஆம் போர்-251