பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - நினைவுக் குமிழிகள்-3 என்று காட்டுவார். இந்தப்பாடலைத் திருநாவுக்கரசு செட்டியார் உள்ளம் உருகப் பாடும்போது கூடியிருந்தோர் அனைவரும் கேதம் விசாரிக்கக் குருட்சேத்திரத்திற்குப் போனதுபோல் உணர்ச்சி வயத்தராய் விட்டதாய்க் கண்டேன். இதற்கு ராய, சொ. தரும் விளக்கம் அற்புதமாக இருக்கும். பாரதத்தைத் துய்க்கும் நமது மனக்கண் முன்னிலும் கருடனது திருத்தோளில் கண்ட பரந்தாமனின் திருக்கோலம் நிற்கின்றது; நெஞ்சிலும் நிலைக்கின்றது. கன்னனது நாவில் ஒம் நமோ நாராயணாய என்ற ஆதி புருடனது திருநாமம் தாண்டவமாடுகின்றது. இதயத்தில் புகுந்த வாளி குருதியால் அவனது உடலை நீராட்டு கின்றது. தேரைச் சுற்றிலும் மன்னரெல்லாம் குழுமி நிற்கின்றனர், வையம் காக்கும் குருடன் மகன்-துரி யோதனன் - அருகில் இருந்து கொண்டு சோகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றான். இந்தச் சூழ்நிலையில்தான் தேர்த்தட்டின்மீது அங்கர் கோமான் - கொடையால் சிறப்புற்ற கன்னன் - பாண்டவர்களில் மூத்தவன் -குற்று யிருடன் கிடக்கின்றான்' இந்நிலையில் அசரீரி, கன்னனும் விசயனும் எதிர் நின்று பொருத போரில், பின்னவன் தொடுத்த வாளியால் முன்னவன் வீழ்ந்து விட்டான், இவன் யார்? பாண்டவர் ஐவருக்கும் முற்பிறந் தவன், குந்தி ஈன்ற கோமகன். அந்திபடுவதற்குமுன் ஆவி உடலினின்று பிரியும் என்று அசரீரி எடுத்துரைக்கின்றது. 17-ஆம் நாள் போரில் பார்த்தன் கணையால் பகலவன் மைந்தன் இறந்து படுவான் என்பதை அறிவாள் குத்திதேவி; இந்தச் செய்தியை எதிர்நோக்கிக் கொண்டு தான் இருந்தாள். அசரீரியின் வாக்கு செவியில் பட்டதும், இவள் உளம் உருக, கண்ணிர் சோர, குழல் சரிய, "கோ, கோ' என்று வந்து, இருகைகளையும் தலையில் புடைத் துக் கொண்டு, தலை நாள் ஈன்ற மகவின்மீது வீழ்ந்து