பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமன் உண்மையில் தருமனே 259 கண்ணனை நேரில் தரிசித்தது போன்ற ஒருவித மயக் கத்தை அடைகின்றனர். ஆரணிய பருவம் - நச்சுப் பொய்கைச் சருக்கத்தில் வரும் நிகழ்ச்சி யொன்றினை விளக்கும் நிலை. வனவாசத் தின்போது ஒரு சமயம் விண்டு சிந்தன் என்ற முனிவர் வாழும் காட்டையடைந்து பாண்டவர்கள் இனிது இருக் கின்றனர். இந்நிலையில் பாண்டவர்களை அழிக்கக் கருது கின்றான் துரியோதனன். கொலை செய்யும் எண்ணமே அவன் தியானமாகின்றது. காளமாமுனிவனை அழைப் பித்து வேள்வி ஒன்று இயற்றி அதினின்று கிளம்பும் பூதத்தால் பாண்டவர்களை அழிக்கத் திட்டம் போடு கின்றான். முனிவனும் அதற்கு இசைகின்றான்; ஆனால், தொடங்கி யான்புரி தீவினை என்னையே சுடுவதல்லது, கொற்ற மடங்கல் போல்வர் தங்கள்மேல் செல்லுமோ? மாயவன் இருக் கின்றான்' என்று கருதித்தான் செயலில் இறங்குகின்றான். தான் இறப்பது மெய் என்ற உறுதியும் அவன் மனத்தில் எழு கின்றது. - முனிவனும் மலைச்சாரலில் ஒரு வேள்வி இயற்ற, ஒரு மாபெரும் பூதம் எழுகின்றது. அஃது இளம் பிறை போன்ற கோரைப் பற்களும், கண்களில் தீப்பொறி பறக்க வும் ஒரு கரு நிறக் குன்றுபோல் பொலிந்து எழுந்தது. இதைக் கண்டு முனிவனேஅஞ்சி மெய்குலைந்திடுகின்றான். "தருமம் தலைகாக்கும் என்பது உலக வசனம் அன்றோ? அது பொய்யாகுமா? பாண்டவர்களைத் தப்பு விக்க அறக்கடவுள் ஒர் அந்தணச்சிறுவனாக வருகின்றான். ஐயன்மீர், அடியேனின் மான் தோலை ஒரு மான் 2. நச்சுப் பொய்கை-10,