பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நினைவுக் குமிழிகள்-3 கெளவிக் கொண்டு ஒடுகின்றது. அதனை மீட்டுத்தாருங்: கள்’’ என வேண்டுகின்றான். பாண்டவர்கள் ஐவரும் அதனைத் தொடர்ந்து ஒடுகின்றனர். அந்த மானின் செயலை, - அகப்பட் டதுபோல் முன்நிற்கும்; அருகுஎய்தலும் கூர்ஆ சுகம்போல் மிகப்பட்டு) ஓடும்; தோன்றாமல் வெளிக்கே ஒளிக்கும்; விளி இணைக்கு முகப்பட் டிடும்;ஈண்டு ஐவரும் தம்முரண்தோள் வன்மை தளர்வுஅளவும் தகைப்பட்டு ஒழிந்தார்.அதில் ஆசை ஒழிந்தார் இந்திர சாலம் எனா.” என்று காட்டுவர் கவிஞர். பின்னர் அஃது. இந்திரசாலம் என அயிர்த்து அதனைக் கைவிட்ட னர். அந்த மான் கன்று இவரை இளைப்பித்த செயலைச் சொல்லின் ஒரு நாவுக்கு அடங்காது; இன்னும் ஆயிரம் உண்டானால் அதற்கும் அடங்காதே! என்கின்றார். ஐவருக்கும் இக்கானம் தலை தெரியாது; மனக் குழப்பம் அடைந்து குடி நீருக்குத் தவிப்பர்' என்று கருதி அறக் கடவுள் ஒரு நச்சுப் பொய்கையாயும் அதைச் சூழ நிற்கும் ஒர் ஆலமரமாயும் நிற்கின்றான், யான் நீ அவன்’ என்று மாறுபாடு கருதாத அறக்கடவுள். தருமனும் தம்பிமாரும் நாவறண்டு நீர்விடாய் தணித்தற்கு நீர் இன்றி அந்த வெப்பம்மிக்க கானகத்தில் தவிக்கின்றனர். தருமன் தாகத்திற்கு நீர் கொணருமாறு பணிக்க, சகாதேவன் அடவிமுழுதும் தேடி எங்கனும் நீர் காணாமல் ஒரு குன்றின் மீது ஏறிச் செல்லும் போது சுனையொன்றைக் காண் கின்றான். வேகமாக ஒடி நீர் பருகுகின்றான்: நீர் வயிற்றை அடையும் முன் அவனதுஆவி பிரிகின்றது. பின்னர் நகுலன், அருச்சுனன், பீமன் இவர்கள் 3. டிெ - டிெ - 19.