பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமன் உண்மையில் தருமனே 261 ஒருவர் பின் ஒருவராகச் சென்று அந்த நச்சுப் பொய்கையின் நீர் பருகி இறந்து படுகின்றனர். இறுதி யாகச் சென்ற பீமன் பொய்கையின் நீர் ஆலம் போலும் என்று தெரிந்து கொள்ளுகின்றான். பிணங் களாய்க் கிடந்த தம்பியரை நோக்கிச் சோகத்தால் தளர் வுறுகின்றான். விசயனை நோக்கி இவன் புலம்பும் மொழி கள் கல் நெஞ்சத்தையும் கரைக்கும். குசையுடைப் புரவி திண்தேர்க் குரக்குவெம் பதாகை யானை அசைவு இல் பொன்சயிலம் அன்ன ஆண்தகை மனத்தி னானை திசை அனைத் தினும்தன் நாமம் தீட்டிய சிலையின் வெம்போர் விசையனை, தன்கண் நீரால் மெய்குளிப் பாட்டி னானே." அதுமக் கொடியையுடையவன் அருச்சுனன். பொன் மலை மேல் வீழ்ந்து கிடக்கின்றான். ஆண்மையினால் நிறைந்த மனமுடையவன். இவனுடைய வில்லின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளது. இத்திருத் தம்பியின் அருகில் அமர்ந்து தன் கண் நீரால் குளிப்பாட்டிய வண்ணம் புலம்புகின்றான். அடுத்து நகுலனை நோக்கி, 'அந்தோ! என் துணை இழந்தேன்; என் செய்வது இனி நான்' என்று சொல்லி அழுகின்றான். என் அண்ணனும் அவ்வெய்ய கானில் இறந்து படுவான். நானும் மரித்தால் இச்செய்தியை யார் அவருக்குத் தெரிவிப்பர்? ஒரு வேளை அண்ணன் இங்கு வந்தால் இந்த நச்சு நீரைப் பருகவும் கூடும்’ என்று கருதி விவரத்தை மணலில் எழுதி வைத்து விட்டுத் தானும் அந்நீரைப் பருகுகின்றான். இந்த இடத்தில் கவிக் கூற்றாக வரும் பாடல். 4. டிெ டிெ-28