பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தினைவுக் குமிழிகள், பொருப்பினும் வலியக் கொற்றப் புயமுடை பீமன் என்றால் அருப்புடை அறலின் நெஞ்சம் அஞ்சுமோ? ஆலம் என்னும் உருப்பினை அறிந்தும், வாரி உண்டுதன் உயிரும் வீந்தான்; நெருப்பினும், சொல்லின் நாவேம்; நினைப்பினும் நெஞ்சம் வேமால்." |அருப்பம்-அருமை: அருப்பு என நின்றது; அறல்நீர்; ஆலம்-விடம்: உருப்பு-வெம்மை) இந்தப் பாடலில் கவிஞரே துன்பப்படுவதைக் காணலாம் ராய. சொ. இதை விளக்கும் அற்புதத்தை நேரில் கண்ட வர்கள்தாம் நன்கு அறிவர். தண்ணிர் கொணர்வதற்காக போன தம்பியர் நால்வரும் திரும்பி வாராதது கண்டு சோகமும் தாகமும் விஞ்ச தருமன் மயங்கி விழுகின்றான் ஐந்து பேருடன் பிறந்த தருமன் தனியனாகின்றான் என 58%e%G5Li GuGä¿®èr pirii (Poetic sympathy). இந்நிலையில் ஓமத் தீயில் எழுந்த பூதம் முனிவனை நோக்கி 'பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள் என்று கேட்கின்றது. பூதமே பாண்டவர்கள் ஐவரும் வதியும் சூழலை அடைந்து அவர்கள் அனைவரையும்கொன்று வா. என்று கட்டளையிடுகின்றான். பூதமும் பாண்டவர்கள் என் கண்ணுக்கு இலக்கு அல்லர் ஆகில், ஐயனே, நின்னையே கொல்லுவேன்' என்று கூறிச் சென்றது. பாண்டவர்கள் நிலையை அறிந்த பூதம் முனிவனிடம் திரும்பி வந்து, மதி இலாதாய்! மாண்டவர் பின்னும் பின்னும் மாள்வரோ?” என்று கூறி அவனை மூவிலைச் குலத்தால் கொன்று விடுகின்றது; இதனைக் கவிஞர், 5. டிெ டிெ-31