பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛64 நினைவுக் குமிழிகள்-3 கருந்த டம்புனல் நஞ்சு: இது நுகர்வது கருதேல்’ என்று தடுத்து நிறுத்தி, நான் உன்னைக் கேட்கும் வினாக்கட்கு விடையளித்தபின் நீரை நுகரலாம்' என்று உரைக்கின்றது. அறக்கடவுள் அருவமாய் உரைத்த சொற்களை உளத்தினில் கொண்டு கையிலிருந்த நீரை வீழ்த்தி நீ வினவுக' என்கின்றான். வினாவும் விடையும் வருமாறு : தருமதேவதை : சொல்லும் நூல்களில் பெரியது எது? தருமன் : அரிய மெய்ச் சுருதி, - r. த.தே இல்லறத்திற்கு உரியது எது? தரு : யோசனை நிறைந்த இல்லாள். த.தே மல்ல மாலையில் மணம் உளது எது? தரு : வண் சாதி. - த.தே நல்ல மாதவம் எது? தரு : தம் குலம் புரி நடை. த.தே முனி குலம் தொழும் கடவுள் யார்? தரு : மொய்துழாய் முகுந்தன். - - த.தே நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது? தரு : உயர் நாண். .. த.தே : தனம் மிகுந்தவர்க்கு ஏது அரண்? தரு : தகை பெறு தானம். - த.தே. இரு செவிக்கு இனியது எது? தரு : இளங்குதலையர் சொல். த.தே நிலையாக நிற்பது எது? தரு : நீடு இசை ஒன்றுமே. -*. 8. டிெ டிெ-53