பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 & நினைவுக் குமிழிகள்-3 களும், வில்லொடு கணைகள் வேல் என்ற படைகளும் யாவும் நல்கி, கானில் வாழ் நாள் கழிந்தது; கரந்துறை வாழ்க்கையைத் தொடங்குவீர்” என்று சொல்லி மறைகின்றான். இந்த நாள் நடைபெற்ற நிகழ்ச்சியினை ராய. சொ. விளக்கின பாங்கு அனைவரையும் மெய், சிலிர்க்கவைத்தது; உள்ளமும் பூரிக்கச் செய்தது. குமிழி-138 33. சேயும் தாயும் சந்திப்பு ராய.சொ. அவர்கள் ஒரு நாள் வில்லிபாரதத்தில் விளக்கின. ஒரு நிகழ்ச்சி இந்தக் குமிழியில் வெளிவரு, கின்றது. பாண்டவர்களின் துரதனாக வந்த கண்ணன் விதுரன் திருமாளிகையில் தங்குகின்றான். தூதுத் செய்தியை உரைத்தபின் அது துரியோதனனிடம் பயன் படாதது கண்டு மீண்டும் விதுரன் திருமாளிகைக்கே. திரும்புகின்றான். கண்ணனிடம் தான் தன்வில்லை முறித்த காரணத்தையும் விளக்குகின்றான் விதுரன். பின்னர் கண்ணன் குந்திதேவியின் திருமாளிகைக்கு வருகின்றான். கன்னனைப் பயந்த காதல் கன்னிதன் கோயில் புக்கான்.” என்று இதனைக் காட்டுகின்றார் வில்லிபுத்துரர் ஆழ்வார். குந்திக்குத் திருமணம் ஆகாத நிலையில் இருந்த செய்தி நினைவுக்கு வரவே, கவிஞர் குந்திதேவியை காதல் கன்னி' என்கின்றார். கதிரவனைக் காதலித்தவள் அவர் நினை வுக்கு வருகின்றாள். 1. வில்லிபாரதம்-கிருட்டிணன் துரது-140-142. 2. டிெ. டிெ- 賞金む。